சென்னையில் ஆர்டர் செய்தால் ராஜஸ்தானிலிருந்து டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனம்

சென்னையில் ஆர்டர் செய்த உணவு ராஜஸ்தானில் டெலிவரி செய்யப்படுவதாக காட்டியுள்ளது.

   | Translated by: Saroja  |  Updated: February 23, 2019 07:39 IST

Reddit
Swiggy User Orders Food In Chennai, App Shows Order Getting Delivered From Rajasthan! Here's How The Company Responded

இந்தியாவில் உணவை இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து சேர்க்கும் ஆப்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது. மக்கள் இந்த ஆப்களை அதிகம் பயன்படுத்த வைக்க விதவிதமான ஆஃபர்கள், தள்ளுபடிகள் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு வந்து சேர்த்தல் போன்றவற்றில் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்தியாவின் பல நகரங்களில் மின்னல் வேகத்தில் உணவுகளை டெலிவரி செய்து வருகிறது. சமீபத்தில் ஸ்வீகி வாடிக்கையாளர் தான் ஆர்டர் செய்த உணவு ராஜஸ்தானிலிருந்து 12 நிமிடங்களில் டெலிவரி செய்ததாக புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் போட்ட ஸ்கீர்ன்சாட்டில் சென்னையில் ஆர்டர் செய்த உணவை ராஜஸ்தானில் டெலிவரி செய்யப்படுவதாக காட்டியுள்ளது. உணவு 12 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படுவதாக காட்டியுள்ளது. 

பர்கவ் ராஜன் என்ற வாடிக்கையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்விகியின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து ஸ்கிரின் சாட்டை பகிர்ந்துள்ளார்.   

இந்த போட்டோவில் ராஜஸ்தானிலிருந்து உணவு எடுத்துவரப்பட்டு 12 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிப்பதை பார்க்கலாம். இதை ட்விட்டரில் பலரும் கேலி செய்து வருகின்றனர். “ஹைப்பர் டிரைவர்? ஹாரி பார்ட்டர் படத்தில் வருவது போல பறப்பதை கண்டுபிடித்து விட்டாரா…” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர் “ எனக்கு மொமொஸ் என்றால் மிகவும் பிடிக்கும்… நேபாலத்திலிருந்து அதை வாங்கி டெலிவரி செய்யப்படுமா…” என்று கேட்டுள்ளார்.

இந்த ஜாலியான ரிப்ளேக்களை இங்கு பார்க்கலாம்.

இதற்கு ஸ்விகி நிறுவனம் “இது தவறுதான். இந்த பிரச்னையின் தீவிரத்தை புரிந்து இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்கிறோம். இதோ போன்ற தவறு எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.  உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement