தன் மகனை கண்டிப்பாக வளர்க்கும் கரீனா கபூர்!!

தைமூருக்கு தினமும் காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. 

Translated by: Kamala Thavanidhi (with inputs from IANS)  |  Updated: May 25, 2019 11:11 IST

Reddit
Taimur Ali Khan Does Not Eat Anything At Birthday Parties! Here’s Why
Highlights
  • கரீனா கபூர் மற்றும் சைஃப் அலிகான் தங்கள் டயட் குறித்து தெரிவித்தனர்.
  • தைமூருக்கு வெளியே எந்த உணவுகளும் கொடுக்கப்படுவதில்லை என்றார் கரீனா.
  • வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட கொடுக்கப்படுகிறது.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் சைஃப் அலி கான் இருவருக்கும் திருமணமாகி மிகவும் தைமூர் அலிகான் என்னும் அழகான ஆண்குழந்தை உண்டு.  இரண்டு வயதே ஆகும் தைமூர், தன் க்யூட்டான புன்னகையால் சமூக வலைதளத்தையே கலக்கி கொண்டிருக்கிறார்.  அவரது சிரிப்பும், தோற்றமும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது.  இவை ஒருபுறம் இருக்க, தைமூரின் உணவு பழக்கத்தை மட்டும் மிகவும் கண்டிப்பாக பின்பற்ற வைக்கிறார் கரீனா. 

 

No fads, just fitness. #saifalikhan #kareenakapoor #instalive

A post shared by Rujuta Diwekar (@rujuta.diwekar) on

சமீபத்தில் டயட்டீஷியன் ருஜுட்டா திவாக்கருடன் சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஆகிய இருவரும் சந்தித்து உறையாடினார்கள்.  அப்போது கரீனா கூறியதாவது, தைமூருக்கு தினமும் காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.  பிறந்தநாள் விழா மற்றும் மற்ற விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் அங்கிருக்கும் உணவுகளை தைமூருக்கு சாப்பிட கொடுக்க மாட்டேன்.  என் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதில் நான் மிகுந்த கவனத்துடன் இருக்கிறேன் என்றார் கரீனா.அவனுக்கு சிப்ஸ் பிடிக்கும் என்பதால் அடிக்கடி அதனை சாப்பிடுவான்.  அது தவிர, இட்லி, தோசை, கிட்சடி, கீரை போன்றவற்றையே கொடுக்கிறேன்.  கீரையை அவன் விரும்பி சாப்பிட மாட்டான்.  தொடர்ச்சியாக கொடுத்து பழக்கியதால் தற்போது அதையும் சமத்தாக சாப்பிட்டு கொள்கிறான். Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com