உப்புமாவை இன்னும் சுவையாக செய்வோமா!!

வறுத்த கடலை, முந்திரி, கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை, எண்ணெய், வெங்காயம், காய்கறிகள் சேர்த்து மிதமான சூட்டில் சேமியா உப்புமா செய்யலாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 18, 2019 15:02 IST

Reddit
Healthy Breakfast Recipes: The Humble Upma, 3 Delicious Ways
Highlights
  • தென்னிந்தியாவில் உப்புமா காலை உணவாக சாப்பிடப்படுகிறது.
  • வெவ்வேறு வழிகளில் உப்புமா செய்து சாப்பிடலாம்.
  • சிறுதானியம் கொண்டு உப்புமா செய்து சாப்பிடலாம்.

இந்தியாவில் காலை உணவாக உப்புமா செய்யப்படுகிறது.  ஆனால் நம்மில் பெரும்பாலானோர்க்கு உப்புமா பிடிக்காது.  உப்புமாவை சுவையாகவும், இன்னும் ருசியாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் செய்யலாம்.  தயாரிப்பதற்கு மிகவும் எளிமையாக உணவுகளுள் உப்புமாவும் ஒன்று.  வறுத்த ரவையுடன் கேரட், பட்டாணி, கடலை, கடுகு, கறிவேப்பிலை கொண்டு தாளித்து செய்தால் ருசியாக இருக்கும்.  இதேபோன்ற முறையில் சேமியா சேர்த்தும் செய்யலாம்.  வேறு முறைகளில் எப்படி உப்புமாவை தயாரிக்கலாம் என்று பார்ப்போம். 

ரவை உப்புமா:

வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு, பருப்பு வகைகளை நெய்யில் சேர்த்து தாளித்து அதில் தண்ணீர் உற்றி கொதித்த பின் ரவை சேர்த்து கெட்டியாக இல்லாமல் சற்று இலகுவாக செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். 

சிறுதானிய உப்புமா:

நீங்கள் விரும்பும் சிறுதானியத்தை சேர்த்து மற்ற காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்யலாம்.  இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருக்கிறது.  நவராத்திரி சமயத்தில் இந்த சிறுதானிய உப்புமா செய்து சாப்பிடலாம். 



gpu94eo8 

சேமியா உப்புமா:

சேமியாவை நெய்யில் வறுத்து பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கலாம்.  இத்துடன் வறுத்த கடலை, முந்திரி, கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை, எண்ணெய், வெங்காயம், காய்கறிகள் சேர்த்து மிதமான சூட்டில் சேமியா உப்புமா செய்யலாம். 



Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement