பேக்டு உணவுகளில் கூடுதல் சர்க்கரையா? தவிர்க்க வேண்டிய 5 பொருட்கள்

   |  Updated: August 10, 2018 19:36 IST

Reddit
There Is Hidden Sugar In These 5 Supermarket Products. Watch Out!

பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களில் கூடுதல் சர்க்கரை, இனிப்பு பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. சுவை ஏற்ற சேர்க்கப்படும் இந்த பொருட்களினால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இந்த இனிப்பு வகைகளினால், உடல் பருமன், நீரிழிவு நோய், இருதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, பேக்டு உணவுகளை அதிகமான அளவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

sugar

1. ப்ரூட் ஸ்மூத்தி

ப்ரூட் ஸ்மூத்தி உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால், மார்கெட்டில் கிடைக்கும் பேக் செய்யப்பட்ட ப்ரூட் ஸ்மூத்திகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சர்க்கரையினால், உடலில் உள்ள நார்ச்சத்து குறைகிறது.

up0i9hp8

2. பேக்டு உணவுகள்

எளிதான காலை உணவுக்கு, பெரும்பாலானோர் பேக் செய்யப்பட்ட சீரியல்ஸ், சாக்கோ வகைகளை எடுத்து கொள்வர். இந்த பேக்டு உணவுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக கண்டறியப்படுள்ளது.

625 cereal

3. கெட்ச்-அப்

மார்கெட்டில் கிடைக்கும் பலவகை கெட்ச்-அப் வகைகளில், கூடுதலாக சேர்க்கப்பட்ட சர்க்கரை, இனிப்பு வகைகள் இடம் பெற்றுள்ளன. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, சர்க்கரை,சோடியம் சேர்த்து பேக் செய்யப்படுகிறது.

i6uhs9t8

4. குளிர்பானங்கள்

சோடா, ஜூஸ், போன்ற பாட்டில் குளிர்பானங்களில் ஃப்ரக்டோஸ் எனப்படும் கூடுதல் இனிப்பு வகை சேர்க்கப்படுகிறது. உணவுக்கு பின் எடுத்துக் கொள்ளப்படும் குளிர்பான வகைகளினால், உடல் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

beverages

5. ப்ரெட்

வையிட் ப்ரெட் மட்டுமல்லாமல், ப்ரவுன் ப்ரெட்டிலும் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. எனவே, அதிகமாகன அளவு ப்ரெட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

bread

பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்கும் போது, தயாரிக்க பயன்பட்டிருக்கும் தேவையான பொருட்களின் பட்டியலை பார்த்து வாங்க வேண்டும். அதிக அளவு கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா தெரிவித்துள்ளார்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement