ஆரோக்கியம் காக்கும் செலரி ஜூஸ்!

தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பதால் நல்ல பலனைத் தரும். உடற்பயிற்சி செய்வதை ஒரு போதும் கைவிடாதீர்கள். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 01, 2019 13:18 IST

Reddit
These Juices Made With Celery Will Level Up Your Health And Wellness
Highlights
  • It's best to drink celery juice early in the morning on an empty stomach
  • Celery has very high water content and zero calorie count
  • You can create concoctions with other foods to relish celery juice

உடல் எடை குறைக்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறீர்களா? அப்பொழுது இந்த செலரியின் பலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். சென்ற வருடம், நியூயார்க் எழுத்தாளர் ஆண்டனி வில்லியம்ஸின் #CeleryJuiceChallenge பற்றி நிச்சயம் அறிந்து கொண்டு இருப்பீர்கள். தொடர்ந்து ஒரு வாரம்  செலரி ஜூஸைக் குடித்துப் பாருங்கள், பிறகு அதன் மகிமையை அறிவீர்கள் என்று சவால் விட்டிருந்தார். செலரி உலகம் முழுவதும் பல மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவில் அதிக அளவு மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. உடல்நலம் காப்பதில் செலரிக்கு பெரும் பங்கு இருப்பதால் அதிகமான மக்கள் செலரியை விரும்பிகிறார்கள்.  நாட்பட்ட நோய்களிலிருந்து ஆரோக்கியமான ஹெல்த் வரை இந்த செலரி பலனளிக்கக்கூடியது.

ஹைலைட்ஸ்

கலோரிகளே இல்லை. முழுவதும் தண்ணீர் மட்டுமே நிறைந்தது.  இந்த செலரி ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் டயட்டில் ஏன் இந்த செலரி ஜூஸை சேர்க்க வேண்டும்?

செலரியில் கலோரிகள் அறவே கிடையாது. அதிக அளவு தண்ணீர் கொண்டது. இதனால் கலோரிகள் உடலில் சேராது. அதிக அளவு நார்ச்சத்தும் இருப்பதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரக்கூடியது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.  

உடலை டீடாக்ஸ் செய்வதால் டாக்ஸின்கள் வெளியேறுகிறது.  சருமத்துக்கும், உடலுக்கும், முடிக்கும் பாதுகாப்பு தருகிறது. செலரியில் ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், பொட்டாசியம் இருப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். 

உணவு நிபுணர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் செலரி ஜூஸ் குடிப்பதால் நல்ல பலனைத் தரும் என்று தெரிவிக்கின்றனர். காலை மட்டும் இல்லாமல் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்போ அல்லது பின்போ கூட குடிக்கலாம். நீங்களே மிக எளிதாக இந்த செலரி ஹெல்த் ட்ரிங்கைத் தயாரிக்கலாம்.

isn1uoig

செலரி, ஸ்வீட் லைம் மற்றும் ஸ்பினாச் ஜூஸ் (Celery, Sweet Lime and Spinach Juice)

ரெசிபி செய்தவர் மெஹர் மிர்ஸா (Recipe by Meher Mirza)

தேவையானவை:

2 செலரி தண்டுகள்

5 பசலைக் கீரைகள்

1 சாத்துக்குடி

எலுமிச்சை ஃப்ளேவருக்கு செய்முறை:

சாத்துக்குடியைப் பிழிந்து வைத்துக் கொண்டு அதனுடன் இந்த கீரை மற்றும் செலரியை நறுக்கிப்போட்டு மிக்ஸியில் அறைக்கவும். பிறகு அதில் லெமன் ஜூஸ் கலந்து குடிக்கவும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு புத்துணர்வையும் தரும்.

jmqnagno

 

ஃப்ரஷ் ஆப்பிள் செலரி ஜூஸ் (Fresh Apple-Celery Juice)

தேவையானவை:

2 செலரிகள் நறுக்கியது

1 ஆப்பிள் பெரிய துண்டுகள்

2 இன்ச் இஞ்சி உறித்து நறுக்கியது

அரை இன்ச் பார்ஸ்லே

அரை டீஸ்புன் ஃப்ரெஷ் லெமன் ஜூஸ்செய்முறை: 

அனைத்து பொருட்களையும் ஜூஸரில் அரைத்து எடுத்தால் ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள்-செலரி ஜூஸ் ரெடி.

039n2e9

 

கேல் அண்ட் செலரி ஜூஸ் (Kale and Celery Juice)

ரெசிபி செய்தவர் மெஹர் மிர்ஸா (Recipe by Meher Mirza)

தேவையானவை

5 கேல் இலைகள்

1 செலரி தண்டு

1 வெள்ளரி (தோல் நீக்கியது)

2 டேபிள் ஸ்பூன் பார்ஸ்லே 

கொஞ்சம் பைனாப்பிள் துண்டுகள்செய்முறை: 

அனைத்தையும் துண்டுகளாக நறுக்கி ஜூஸரில் அரைத்து வடிகட்டியோ அல்லது வடிகட்டாமலோ குடிக்கலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.comதினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பதால் நல்ல பலனைத் தரும். உடற்பயிற்சி செய்வதை ஒரு போதும் கைவிடாதீர்கள். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement