எலுமிச்சை மற்றும் பெர்ரி கொண்டு டீடாக்ஸ் ட்ரிங்க் தயாரிக்கலாம்!!

நான்கு ஸ்ட்ராபெர்ரி, ஒரு எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை பட்டை தூள் சேர்த்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை குடித்து வரலாம்.   

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 17, 2019 16:43 IST

Reddit
Weight Loss: Drink These Lemon And Berry Detox Drinks To Shed Kilos
Highlights
  • எலுமிச்சை சாறு உடல் எடையை குறைப்பதுடன் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
  • பெர்ரியில் ஆண்டிஆக்ஸிடண்ட அதிகமாக உள்ளது.
  • இந்த பானங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் போது உடல் சோர்வடையும்.  உடல் எடை குறைக்க தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது.  உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும்  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய நச்சுக்கள் உடலில் தேக்கமடையும்போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.  உடலில் உள்ள அதிகபடியான கலோரிகளை கரைக்க டீடாக்ஸ் பானங்களை குடிக்கலாம்.  சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான எலுமிச்சையில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  இது செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து, உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.  எலுமிச்சையை போலவே செர்ரியிலும் வைட்டமின் சி, கே, மாங்கனீஸ் ஆகியவை இருக்கிறது.  இதிலும் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் இவை இரண்டையும் கொண்டு டீடாக்ஸ் ட்ரிங்க் தயாரித்து குடிக்கலாம்.  நான்கு ஸ்ட்ராபெர்ரி, ஒரு எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை பட்டை தூள் சேர்த்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை குடித்து வரலாம். vneanaho

 

லெமன் செர்ரி ப்ளாஸ்ட்: 

அரை கப் ப்ளூபெர்ரி, அரை கப் ராஸ்பெர்ரி இரண்டையும் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.  அத்துடன் இரண்டு எலுமிச்சை, ஒரு கொத்து புதினா இலை சேர்த்து இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.  காலையில் எழுந்து இதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து நாள் முழுக்க இதனை குடித்து கொண்டே இருக்கலாம்.  இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. 

க்ரான்பெர்ரி லைம் ஃபிஸ்: 

மிக்ஸியில் 4-5 கிரான்பெர்ரியுடன் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.  அத்துடன் அரை கப் சோடா நீர் மற்றும் ஒரு எலுமிச்சை, ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.  இது உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

உடல் எடை குறைக்க இந்த டீடாக்ஸ் பானங்களை குடித்து வரலாம்.  


 

 
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement