மென்மையான சருமத்திற்கான ஃபேஸ் மாஸ்க்!

   |  Updated: December 11, 2018 18:16 IST

Reddit
This Two-Ingredient Face Mask Will Help You Get Soft And Supple Skin

குளிர்காலத்தில் சருமம் வறண்டு தோல் உறிந்து வரும். இதற்காக நீங்கள் எந்த க்ரீம்களையும் பயன்படுத்த வேண்டாம். வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே முகத்தை பொலிவாக வைத்திருக்க முடியும். வாழைப்பழம் மற்றும் பால் இரண்டுமே சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. இவை இரண்டையும் வைத்து எப்படி ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை

வாழைப்பழம்
பால் – ஒரு தேக்கரண்டி

செய்முறை

ஒரு பௌலில் வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி போட்டு நன்கு மசித்து கொள்ளவும்.
அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கெட்டியாக கலந்து பின், முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும்.
15-20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும்.

குறிப்பு: முகத்திற்கு இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரம் இரண்டு முறை போடலாம். முகத்தை கழுவிய பின் மாய்சுரைசரை தடவலாம். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement