நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி!!

அன்னாசி மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கிறது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 22, 2019 11:55 IST

Reddit
Monsoon Diet: Drink This 3-Ingredient Coconut Water Juice To Boost Your Immunity This Season
Highlights
  • உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் இளநீரில் கிடைக்கிறது.
  • இளநீரில் ஊட்டச்சத்துக்களும் அதிகமாக இருக்கிறது.
  • அன்னாசி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

பருவக்கால  மாற்றத்தின் போது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  அப்படி குறையும் போது, நோய் தொற்று மிக எளிதில் ஏற்பட்டுவிடும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், இளநீர் குடிக்கலாம்.  தினசரி இளநீர் குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.  இளநீரில் எலக்ட்ரோலைட் இருப்பதால் சருமம் மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  இளநீருடன் அன்னாசி மற்றும் எலுமிச்சை சேர்த்து கொள்வதால் உடலுக்கு கூடுதலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.  அன்னாசி மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கிறது.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் பானத்தை எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.  

2isg0fk

 

தேவையானவை: 
இளநீர் - 1 க்ளாஸ் 
எலுமிச்சை - 1 
அன்னாசி - 1 கப் 

Listen to the latest songs, only on JioSaavn.com

செய்முறை: 
முதலில் அன்னாசியை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். 
நன்கு அரைத்த பின் அன்னாசி சாற்றை ஒரு க்ளாசில் ஊற்றி, அதில் இளநீர் சேர்த்து கலந்து கொள்ளவும். 
பின் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம்.  

இவ்வாறு தினமும் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். 
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement