மூன்றே பொருட்களை கொண்டு சுவையான சோயா சங்க் எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்!!

உடல் எடை குறைப்பதற்கு இதனை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.  இந்த ரெசிபி தயாரிப்பதற்கு மிகவும் எளிமையானது.  கலோரிகள் குறைந்தது.  மேலும் புரதம் நிறைந்தது.       

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 17, 2019 16:06 IST

Reddit
Weight Loss: This 3-Ingredient Protein-Rich Soya Chunk Delight May Help You Shed Extra Kilos
Highlights
  • புரதம் மிகவும் முக்கியமான ஒன்று.
  • சோயாவை அடிக்கடி சேர்த்து கொள்வதால் உடல் எடை குறையும்.
  • சைவ பிரியர்கள் சோயா உணவை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளுள் புரதம் மிகவும் முக்கியமான ஒன்று.  தினமும் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் புரதம் கட்டாயமாக இருக்க வேண்டும்.  அசைவ உணவுகளை காட்டிலும் புரதம் நிறைந்த சைவ உணவுகள் ஏராளமாக இருக்கிறது.  பனீர், டோஃபு போன்ற உணவுகளில் அதிகபடியான புரதம் இருக்கிறது.  மேலும் சோயா பீன்ஸில் இருந்து சோயா சங்க் தயாரிக்கப்படுகிறது.  சோயா சங்க் கொண்டு ருசியான மற்றும் எளிமையான ரெசிபிகளை செய்ய முடியும்.  குறிப்பாக உடல் எடை குறைக்க சோயா சங்க் சாப்பிடலாம். நன்மைகள்:

சோயாவில் புரதம் நிறைந்திருக்கிறது.  100 கிராம் சோயாவில் 36 கிராம் புரதம் இருப்பதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.  சோயா உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.  இதில் ஃபைட்டோஈஸ்ட்ரோஜென் இருப்பதால் பெண்களின் உடலில் இருக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜென் சுரப்பை தூண்டுகிறது.  சோயா சங்க் கொண்டு ரெசிபியை எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம். soyabean 

தேவையானவை:

சோயா சங்க் – 100 கிராம்

ஹங் கர்டு – 1 கப்

ப்ரோக்கோலி – 100-150 கிராம்

ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டிசெய்முறை:

ஒரு பௌளில் சிறிது வெதுவெதுப்பான நீர் ஊற்றி, அதில் சோயா சங்க் மற்றும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.  10 நிமிடங்கள் கழித்து, நன்கு பிழிந்து தனியே எடுத்து வைக்கவும். 

ஒரு பேன் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும்.  அதில் சோயா சங்க், ப்ரோக்கோலி, இரண்டையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கி ஒரு பௌலில் தனியே எடுத்து வைக்கவும். 

பின் அதில் ஹங் கர்டு சேர்த்து நன்கு கலந்து சாப்பிடலாம்.  இதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்க தேவையில்லை. 

Listen to the latest songs, only on JioSaavn.comஉடல் எடை குறைப்பதற்கு இதனை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.  இந்த ரெசிபி தயாரிப்பதற்கு மிகவும் எளிமையானது.  கலோரிகள் குறைந்தது.  மேலும் புரதம் நிறைந்தது.     

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement