உடலில் கொழுப்பை கரைக்க ஆப்பிள் இஞ்சி தேநீர் குடிக்கலாம்!!

ஆப்பிள் மற்றும் இஞ்சி சேர்க்கப்பட்ட தேநீரை குடித்து வந்தால் தொப்பை குறைவதுடன் கலோரிகளும் குறையும்.  இந்த தேநீரில் பால் சேர்க்க தேவையில்லை. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 30, 2019 14:40 IST

Reddit
Weight Loss: Drink Apple-Ginger Tea To Burn Belly Fat Faster
Highlights
  • உடலில் கலோரிகளை குறைக்க ஆப்பிள் இஞ்சி சேர்த்து குடிக்கலாம்.
  • ஆப்பிளில் நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறது.
  • இஞ்சியை தொடர்ச்சியாக உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும்.

உடல் எடை குறைக்கவும், உடலில் உள்ள அதிகபடியான கொழுப்பை கரைக்கவும் ஏராளமான டயட்கள் வந்துவிட்டன.  உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை பின்பற்றுவதால் உடல் எடை தானாகவே குறையும்.  அதுதவிர தொடர்ச்சியாக உடல் எடையை குறைக்கக்கூடிய பானங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.  க்ரீன் டீ, ஹெர்பல் டீ போன்றவற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உண்டு.  ஆப்பிள் மற்றும் இஞ்சி சேர்க்கப்பட்ட தேநீரை குடித்து வந்தால் தொப்பை குறைவதுடன் கலோரிகளும் குறையும்.  இந்த தேநீரில் பால் சேர்க்க தேவையில்லை.  ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கிறது.  உடல் எடை குறைக்க ஆப்பிள் சிறந்த உணவு.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை சீராக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் ஆப்பிள் சாப்பிட்டு வரலாம். 293d86q

 

இஞ்சியில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஷோகல் மற்றும் ஜிஞ்சரால் போன்ற சத்துக்கள் இருக்கிறது.  இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.  நீரிழிவு நோயாளிகளுக்கு இஞ்சி மிகவும் சிறந்த அருமருந்து.  உடல் எடை குறைக்க, நறுமணமிக்க ஆப்பிள் இஞ்சி தேநீரை குடிக்கலாம். ljoc8qjo

 

ஆப்பிள் இஞ்சி தேநீர் தயாரிக்க:

ஆப்பிள் - 1

இஞ்சி - ஒரு இஞ்ச்

தண்ணீர் - 3 கப்

தேன் - 1 தேக்கரண்டி

செய்முறை:

1. ஆப்பிளை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 

2. இஞ்சியையும் அதேபோல தோல் சீவி, துருவி கொள்ளவும். 

3. ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.  அத்துடன் நறுக்கி வைத்த ஆப்பிள் மற்றும் இஞ்சி சேர்த்து 10-12 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். 

4. இவை சில நிமிடங்கள் ஆறும்வரை காத்திருக்கவும். 

5. இதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.  காலை வெறும் வயிற்றில் இதனை குடித்து வந்தால் உடல் எடை தானாக குறையும்.  Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement