பூசணிக்காய் கொண்டு உடல் எடை குறைக்கலாம்!!

உடல் எடை குறைப்பதற்கு பூசணிக்காயை பூண்டு சேர்த்து பேக் செய்து சாப்பிடலாம். ரெட் வினிகர் மற்றும் சோர் ஃப்ளேவர் சேர்த்து இந்த ரெசிபியை தயாரிக்கலாம்.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 16, 2019 12:09 IST

Reddit
Weight Loss: This Baked Pumpkin Meal Is Perfect For Those On A Diet
Highlights
  • பூசணிக்காயில் கலோரிகள் மிகமிக குறைவு.
  • இதில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க உதவும்.
  • பூசணியை பேக் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

உடல் எடை குறைக்க சாப்பிடாமலே இருப்பது மிகவும் தவறான செயல். ஆரோக்கியமான உணவுகளை நேரத்திற்கு சாப்பிட்டு வந்தாலே போதும் உடல் எடை தானாக குறையும்.  கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட்டு வரலாம். பூசணிக்காயில் இயற்கையாகவே இனிப்பு சுவை நிறைந்திருக்கிறது.  மேலும் பூசணி விதையில் கூட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  இதனை கொண்டு சூப், பொரியல், இனிப்பு போன்ற ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.  

பூசணியில் கலோரிகள் மற்றும் கொழுப்பு சத்து மிகவும் குறைவு.  100 கிராம் பூசணியில் 26 கிராம் கலோரிகள் இருக்கிறது.  பூசணியில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் சீராக இருக்கும்.  மேலும் நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும். பூசணியில் பொட்டாஷியம் இருப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவும் சீராக வைத்திருக்கும்.  நீரிழிவு நோயாளிகளும், இரத்த அழுத்தம் உள்ளவர்களும் அடிக்கடி பூசணிக்காய் சாப்பிட்டு வரலாம்.  
 

pjqcje5g

  

உடல் எடை குறைப்பதற்கு பூசணிக்காயை பூண்டு சேர்த்து பேக் செய்து சாப்பிடலாம். ரெட் வினிகர் மற்றும் சோர் ஃப்ளேவர் சேர்த்து இந்த ரெசிபியை தயாரிக்கலாம்.  ரெட் ஒயினில் வைட்டமின், தாதுக்கள், இரும்புச்சத்து, பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  வினிகரை சேர்த்து கொள்வதால் இருதய ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ரால் சீராக இருக்கும்.  ஆலிவ் எண்ணெய், தைம், பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி உடல் எடை குறைக்க உதவுகிறது.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement