புரத தேவையை பூர்த்தி செய்யும் ஆளிவிதை மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தி!!

100 கிராம் ஆளிவிதையில் 18 கிராம் புரதம் இருக்கிறது.  ஆளிவிதையில் நார்ச்சத்து, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இருதய ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 22, 2019 14:03 IST

Reddit
High Protein Diet: This Banana And Flaxseed Smoothie May Be Ideal For Your Weight Loss Diet
Highlights
  • வாழைப்பழத்தில் மாங்கனீஸ் மற்றும் மக்னீஷியம் இருக்கிறது.
  • ஆளிவிதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது.
  • புரதம் நிறைந்த இந்த ஸ்மூத்தியை வீட்டிலேயே தயாரித்து குடிக்கலாம்.

அமினோ அமிலங்களின் கோர்வைதான் புரதம்.  உடலுக்கு தேவையான புரதம் போதியளவு கிடைத்தால் மட்டுமே உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  புரத பற்றாக்குறை ஏற்பட்டால் தசைகள் வலுவிழந்து போகும்.  இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு மிக எளிதில் புரத தேவை பூர்த்தியடைந்துவிடுகிறது.  சைவ பிரியர்களுக்கு புரதம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை.  சிக்கன், முட்டை, மீன், வாழைப்பழம் மற்றும் ஆளிவிதை ஆகியவற்றிலும் புரதம் மிகுதியாக உள்ளது.  இது உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தசைகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.   

100 கிராம் ஆளிவிதையில் 18 கிராம் புரதம் இருக்கிறது.  ஆளிவிதையில் நார்ச்சத்து, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இருதய ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும்.  வாழைப்பழத்தில் பொட்டாஷியம், வைட்டமின் பி6, சி, மாங்கனீஸ் மற்றும் மக்னீஷியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் இவை இரண்டையும் சேர்த்து சுவையான ஸ்மூத்தி தயாரிக்கலாம்.  

c9iamr6g

 

 

தேவையானவை: 

ஆளிவிதை - 2 மேஜைக்கரண்டி 

பால் - 1 கப் 

வாழைப்பழம் - 1/2 கப் 

தேன் - 2 தேக்கரண்டி 

செய்முறை: 

* ஒரு மிக்ஸியில் வாழைப்பழம், ஆளிவிதை, தேன், பால் ஆகியவை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். 

* ஒரு பௌல் அல்லது க்ளாஸில் இதனை ஊற்றி வைக்கவும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

* அதன் மேல் நறுக்கி வைத்த ஸ்ட்ராபெர்ரி மற்றும் வாழைப்பழத் துண்டுகளை வைத்து பரிமாறவும்.  

உடல் எடை குறைக்க இதனை தினமும் கூட இந்த ஸ்மூத்தியை செய்து குடிக்கலாம்.  இதனால் உடலுக்கு தேவையான புரதம் கிடைப்பதுடன் தசைகளும் வலுவாகும்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement