இருதய நோயை தடுக்க தக்காளி ஜூஸ் குடிக்கலாம்!!

இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், பீட்டா கெரட்டின், பைட்டோநியூட்ரியண்ட் மற்றும் லைக்கோபீன் இருப்பதால் இருதய நோய்களின் அபாயத்தை தவிர்க்கிறது.  

Translated by: Kamala Thavanidhi (with inputs from IANS)  |  Updated: June 06, 2019 13:57 IST

Reddit
Drinking Juice Of This Common Vegetable May Reduce The Risk Of Heart Diseases

இந்திய சமையல்களில் தக்காளிக்கென்று தனியிடம் உண்டு.  தக்காளி சேர்க்கப்படாத சமையல் எப்படி ருசியானதாக இருக்கும்?  அடர் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய தக்காளியில் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கிய நன்மைகளும் உண்டு.  தக்காளி சாறு, சூப், சாலட் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.  தக்காளி சாறில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  உப்பு சேர்க்கப்படாத தக்காளி சாறு குடிப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் குறைகிறது.  இதனால் இருதய சம்பந்தமான ஆரோக்கியம் பாதிக்கப்படாது.  rkt4b9pg

ஜப்பானில் 500 பேரை இந்த ஆய்வுக்குட்படுத்தினர்.  அதில் 184 ஆண்கள் மற்றும் 297 பெண்கள் கலந்துக் கொண்டனர்.  இதில் 94 பேருக்கு தக்காளி சாறு குடித்ததால் உயர் இரத்த அழுத்தம் குறைந்து சீராக இருந்தது.  125 பேருக்கு உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்திருந்தது.  சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் சுமார் 141.2 முதல் 137 mmHg ஆகவும், டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் சுமார் 83.3 முதல் 80.9 mmHg ஆக இருந்தது.  மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் சுமார் 155 முதல் 149.9 mg/dL ஆக குறைந்திருந்தது.  மேலும் இது பாலினம் மற்றும் வயது பொருத்து மாறுப்பட்டது.  

tomato juice

தக்காளி சாற்றில் நார்ச்சத்து, நியாசின் என்னும் பொருள் இருப்பதால் எல்டிஎல் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்க செய்கிறது.  மேலும் இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், பீட்டா கெரட்டின், பைட்டோநியூட்ரியண்ட் மற்றும் லைக்கோபீன் இருப்பதால் இருதய நோய்களின் அபாயத்தை தவிர்க்கிறது.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement