கீட்டோ டயட் சூப் குடித்தால் உடல் எடை குறையுமா?

ப்ரோக்கோலியை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை அரைத்து விழுதாக பயன்படுத்தலாம்.  அத்துடன் தைம் மற்றும் துளசியை சிறிதளவு சேர்த்து தயாரித்தால் சூப்பின் மணம் அருமையாக இருக்கும். 

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: September 03, 2019 16:48 IST

Reddit
Weight Loss: This Decadent Broccoli And Cheese Soup Is Haven For Keto Diet Followers
Highlights
  • வெண்ணெய் மற்றும் செடர் சீஸில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கிறது.
  • மழைக்காலத்தில் இதனை சூடாக செய்து சாப்பிடலாம்.
  • ப்ரோக்கோலியில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.

உடல் எடை குறைக்க கீட்டோ டயட்டை பின்பற்றுபவர்கள் நம்மில் நிறைய பேர் உள்ளனர்.   கார்போஹைட்ரேட் அளவை குறைத்து கொழுப்பு சத்து நிறைந்த உணவை உட்கொண்டு, உடலில் உள்ள கொழுப்பை கரைப்பது தான் கீட்டோ டயட்டின் தத்துவம்.  உடல் எடை குறைக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் கீட்டோ டயட் சூப்பை குடித்து வரலாம்.  

ப்ரோக்கோலி: 

முதலில் ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.  ப்ரோக்கோலியை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை அரைத்து விழுதாக பயன்படுத்தலாம்.  அத்துடன் தைம் மற்றும் துளசியை சிறிதளவு சேர்த்து தயாரித்தால் சூப்பின் மணம் அருமையாக இருக்கும்.  மேலும் இவற்றில் மருத்துவ குணங்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.  இத்துடன் வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்தும் செய்யலாம். 

7l42v858

 

தேவையானவை: 

ப்ரோக்கோலி - 1 கப் 

ஆலிவ் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 

வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 

வெங்காயம் - 1 

உப்பு - தேவைக்கேற்ப 

மிளகு தூள் - தேவைக்கேற்ப 

பாப்ரிக்கா - சுவைக்கேற்ப 

செய்முறை: 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றவும்.  அத்துடன் வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு மற்றும் சிறிதளவு ப்ரோக்கோலியை சேர்க்கவும்.  

பின் அதில் உப்பு, மிளகு, பாப்ரிக்கா மற்றும் வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து வேக வைக்கவும்.  வெந்தபின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.  

மீண்டும் அடுப்பில் கடாய் வைத்து அதில் நறுக்கி வைத்த ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கி அத்துடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து மேலும் சிறிதளவு வெஜிடபிள் ஸ்டாக் சேர்க்கவும்.  

பின் அதில் ஹெவி கிரீம் மற்றும் செடர் சீஸ் சேர்த்து சூடாக பரிமாறவும்.  

 

Listen to the latest songs, only on JioSaavn.com 
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement