பப்பாளியில் சாலட் சாப்பிடுங்க!! உடல் எடை குறைத்திடுங்க!!

இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் இருதய ஆரோக்கியத்தை சீராக வைக்கும்.  மேலும் வைட்டமின் சி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 18, 2019 14:30 IST

Reddit
Weight Loss Diet: This Delish Papaya Salad Will Changed The Way You've Seen Papayas So Far!

பப்பாளி எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று.  இதனை காயாகவும், பழமாகவும் சாப்பிடலாம்.  இதில் ஏராளமான நன்மைகள் அடங்கியிருக்கிறது.  டயட்டில் இருப்பவர்கள் இதனை கொண்டு சாலட் தயாரித்து சாப்பிடலாம்.  சாலட்டை பொருத்தவரையில் நீங்கள் விரும்பும் பழங்கள் அல்லது காய்கறிகள் கொண்டு தயாரிக்கலாம்.  வெள்ளரி, கேரட், வெங்காயம் ஆகியவற்றை சாலட்டில் சேர்க்கலாம்.  பப்பாளியில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் சீராக இருப்பதுடன் நீண்ட நேரம் நிறைவாகவும் இருக்க முடியும்.  ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி குறைவான அளவு ஆரோக்கியம் நிறைந்த உணவை உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும். 

jangh8io



இந்த சாலட்டில் இஞ்சி, மிளகு, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம்.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் இருதய ஆரோக்கியத்தை சீராக வைக்கும்.  மேலும் வைட்டமின் சி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.  சாலட் ருசியாக இருக்க இதில் சோயா சாஸ் மற்றும் எலுமிச்சை தோல் துருவி சேர்த்து கொள்ளலாம்.  மேலும் மொமொருப்பாக இருக்க கடலை சேர்த்தும் சாப்பிடலாம்.  உடல் எடை குறைக்க இதனை அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. 







Comments



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement