நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் தேநீர்!!

மஞ்சள் தேநீர் உடலுக்கு சிறந்த க்ளென்சராக பயன்படுகிறது.  கல்லீரலை க்ளென்ஸ் செய்து நன்கு இயங்க செய்கிறது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 14, 2019 16:35 IST

Reddit
Turmeric Tea: This Detox Haldi Tea Recipe Could Help Boost Weight Loss, Immunity And Manage Diabetes
Highlights
  • மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் உலகளாவில் பயன்படுத்தப்படுகிறது.
  • ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.
  • உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற பயன்படுகிறது.

மஞ்சளில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது.  இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தன்மை இருக்கிறது.  மேலும் சிறந்த வலி நிவாரணியாகவும் மஞ்சள் பயன்படுகிறது.  அல்ஸீமர் நோயால் பாதிக்கப்பட்டோர்க்கு மஞ்சள் கொடுத்தால் மூளை செயல்பாட்டு திறன் சிறப்பாக இருக்கும்.  சரும பராமரிப்பிற்கு உகந்தது மஞ்சள்.  மஞ்சள் சேர்த்து பால் குடித்தால் உடல் வலி, சோர்வு ஆகியவை நீங்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  மஞ்சள் சேர்த்த பால் பிடிக்காதவர்கள் மஞ்சளில் தேநீர் தயாரித்து பருகலாம்.  மஞ்சள் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரில் என்னென்ன நன்மைகள் உண்டு என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்...

1. மஞ்சள், மிளகு, தேன் மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் இந்த தேநீரில் ஆண்டிவைரல் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் சளி மற்றும் இருமலை சரி செய்கிறது.  
 

djppt2pg

 

2. மஞ்சள் தேநீர் உடலுக்கு சிறந்த க்ளென்சராக பயன்படுகிறது.  கல்லீரலை க்ளென்ஸ் செய்து நன்கு இயங்க செய்கிறது. 

3. மஞ்சள் மற்றும் இஞ்சி இரண்டுமே செரிமானத்தை தூண்டக்கூடியது.  செரிமானம் சீராக இருந்தால் தான் மெட்டபாலிசம் விரைவாக இருந்து உடல் எடை குறையும்.  

4. நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் மிகவும் நல்லது.  ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது.  இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கிறது.  

5. சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றிவிடுகிறது.  சரும துளைகளை சுத்தம் செய்து, ஆரோக்கியமான மற்றும் இளமை தோற்றத்துடன் வைத்திருக்கிறது.  
 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement