குடல் அழற்சி நோய்... ஜாக்கிரதை!

ஃபாஸ்ட்டிங் மிமிகிங் டயட் (Fasting Mimicking Diet - FMD) என்றழைக்கப்படும் இந்த முறை டயட் குடல் அழற்சி நோய் மட்டுமல்லாமல், குடல் சார்ந்த மற்ற பிரச்னைகள், நீரிழிவு பிரச்னைக்கும் ஏற்றது.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: March 27, 2019 12:56 IST

Reddit
This Diet May Reverse Symptoms Of Inflammatory Bowel Disease

குடல் அழற்சி நோய் என்பதை கேட்கும்போதே புதியதாக இருக்கும். நமது குடலின் பாகங்கள் சரியாக வேலை செய்யாமல் போனால் இந்த நோய் வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். சிறுகுடல், பெருங்குடல் இரண்டுமே இந்த நோயால் பாதிப்படைவதாகத் தெரிவிக்கின்றனர். ஒரு ஆய்வின் முடிவில் உணவு முறையை மாற்றியமைப்பதன் மூலம் இந்த நோய் பாதித்தவர்களுக்கு உதவ முடியும் என்று தெரியவருகிறது. கலிபோர்னியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று இதற்கான முயற்சியை மேற்கொண்டது. அதில் தாவர வகை உணவுகளை மட்டுமே  எலிகளுக்குக் கொடுத்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்ததாக journal Cell Reports என்ற புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com

இந்த முடிவு அவர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இந்த டயட்டை அவர்கள் ஃபாஸ்ட்டிங் மிமிகிங் டயட் (Fasting Mimicking Diet - FMD) என்றழைக்கின்றனர். இந்த டயட் குடல் அழற்சி நோய் மட்டுமல்லாமல், குடல் சார்ந்த மற்ற பிரச்னைகள், நீரிழிவு பிரச்னைக்கும் ஏற்றது. எலிக்கு நடத்தப்பட்ட இந்த சோதனையில் மனிதர்களின் உணவுமுறையைப் போலவே FMD சுழற்சி முறையைப் பின்பற்றியே நடத்தப்பட்டது.

இரண்டாவதாக வாட்டர் ஃபாஸ்டிங் முறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் எலிக்கு ஸ்டெம் செல்ஸ் அதிகமானதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்புற்றனர். இந்த நோயை முற்றிலும் அழிப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement