சுவையான பனீர் ரெசிபியும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!!

 100 கிராம் பனீரில் 22-23 கிராம் புரதம் இருக்கிறது.  பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: October 01, 2019 16:22 IST

Reddit
High-Protein Diet: This Easy-To-Make Paneer Steak Could Be A Healthy Addition To Your Protein-Rich Dinner
Highlights
  • பனீரில் புரதம் மிகுதியாக இருக்கிறது.
  • பசியுணர்வின்றி இருக்க புரத உணவுகளை சாப்பிடலாம்.
  • பனீரை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

 உடல் எடை குறைக்கவும், ஃபிட்டாக இருக்கவும் உடலுக்கு புரதம் மிகவும் அத்தியாவசியமானது.  தொடர்ச்சியாக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீங்கள் நீண்ட நேரம் நிறைவாக உணர முடியும்.  எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடல் எடையை அதிகரிப்பதுடன் ஆரோக்கியத்தையும் கெடுக்க வல்லது.  புரதம் நிறைந்த உணவுகளுள் பனீர் மிகவும் முக்கியமானது.  பனீரின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.  Listen to the latest songs, only on JioSaavn.com

eqj7b8j
 

பனீர் நன்மைகள்: 
இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றில் புரதம் அதிகமாக இருக்கிறது.  பனீர் அல்லது காட்டேஜ் சீஸில் புரதம் அதிகமாக இருக்கிறது.  100 கிராம் பனீரில் 22-23 கிராம் புரதம் இருக்கிறது.  பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.  கார்போஹைட்ரேட் குறைவான உணவை தொடர்ச்சியாக சாப்பிடும்போது உடல் எடை குறையும்.  பனீரில் கால்சியம் மற்றும் பொட்டாஷியம் சத்து அதிகமாக இருக்கிறது.  

சாண்ட்விச், கிரேவி, புலாவ், பக்கோடா, கட்லெட் ஆகியவற்றுடன் பனீர் சேர்த்து சாப்பிடலாம்.  காட்டேஜ் சீஸ் சேர்த்து சாப்பிடலாம்.  பனீர் ஸ்டீக் தயாரிப்பது மிகவும் எளிமையானது.  காட்டேஜ் சீஸ், கொத்தமல்லி இலை, மிளகாய், சீஸ், தக்காளி ஆகியவை சேர்த்து சுவையான ரெசிபி தயாரிக்கலாம்.  இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.  இந்த கலவையை கோதுமை பிரட்டில் வைத்து பேக் செய்து சாப்பிட்டால் உடலுக்கு குறைந்த அளவு கலோரிகள் கிடைக்கிறது.  
 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  PaneerProtein

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement