கோடை வெப்பத்திலிருந்து எஸ்கேப் ஆக தூத் சோடா குடிக்கலாம்!!

இரண்டே நிமிடங்களில் ருசியான குளிர்ச்சி மிகுந்த தூத் சோடாவை இப்படி தயாரித்து பாருங்கள்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 30, 2019 19:00 IST

Reddit
Summer Diet Tips: This Fizzy Milk Drink Will Make You Toss That Soda Can Out  
Highlights
  • தூத் சோடா உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.
  • இதனை தயாரிப்பது மிகவும் எளிமையானது.
  • ஃப்ளேவர் வேண்டுமானால் ரோஸ் சிரப் சேர்த்து கொள்ளலாம்.

கோடையில் குளிர்ச்சியான பானங்களை குடிப்பது தானே வரம்.  கோடை வெப்பத்தை தணிப்பதற்கு வீட்டின் சமையலறையிலேயே எல்லாவித பொருட்களும் இருக்கும்.  வழக்கமாக எலுமிச்சை சாறு, மோர் போன்றவற்றையே உடல் குளிர்ச்சிக்கு குடித்திருப்போம்.  இதனால் உண்டான சலிப்பை தவிர்க்க, பால் மற்றும் சோடா சேர்த்து தயாரிக்கப்படும் தூத் சோடாவை ஒரு மாறுதலுக்காக குடித்து பாருங்களேன்.  இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.  மிகவும் எளிமையாக சில நிமிடங்களிலேயே தயாரித்துவிடலாம்.தேவையான பொருட்கள்:

பால் – 500 மில்லி

சோடா – 250 மில்லி

ஐஸ்கட்டிகள் – 5-6

ரோஸ் சிரப் – விரும்பினால்

ms40p56o

 

Listen to the latest songs, only on JioSaavn.com

செய்முறை:

முதலில் மிக்ஸியில் பால் சேர்த்து கொள்ளவும். அத்துடன் சோடா ஊற்றி, ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.  பால் இரண்டு மடங்கு பயன்படுத்தினால் 1 மடங்கு சோடா சேர்த்து கொள்ளலாம். நீங்கள் விருப்பப்பட்டால் இத்துடன் ரோஸ் சிரப் சேர்த்து கொள்ளலாம்.  இவற்றையெல்லாம் ஒன்றாக அரைத்து ஒரு க்ளாஸில் ஊற்றி பரிமாறலாம்.  இவை ருசியாக இருப்பதுடன் உடல் சூட்டையும் குறைக்கிறது.  குளிர்ச்சியான இந்த பானத்தை வீட்டிலேயே செய்து பருகுங்கள்

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement