டயட்டில் இருப்பவர்கள் கட்டாயமாக பாதாம் சாப்பிட வேண்டும்!!

சியா விதைகள், ஆளி விதை, பூசணி விதை மற்றும் பாதாம் ஆகியவை சேர்த்து சாப்பிடலாம். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 17, 2019 15:26 IST

Reddit
On A High-Protein Diet? This Healthy Almond Snack May Be Ideal For Those Mid-Meal Cravings
Highlights
  • பாதாமில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருக்கிறது.
  • புரதம் நிறைந்த பாதாமை தினமும் சாப்பிட்டு வரலாம்.
  • ஆழ்ந்த உறக்கம் பெற பாதாம் சாப்பிட்டு வரலாம்.

பசி நேரத்தின்போது எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவோம்.  அவை உடல் பருமனாக செய்கிறது.  உடல் பருமனாவதுடன் உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.  இவற்றை தடுக்க அவ்வப்போது ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் நிறைந்த உணவு பொருட்களை பசி நேரத்தில் சாப்பிட வேண்டும்.  பாதாம் அதற்கு சிறந்த உணவு.  பாதாமில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், புரதம், ட்ரிப்டோபேன் ஆகியவை இருக்கிறது.  இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், இருதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.  உடல் எடை குறைக்கவும் பாதாம் சாப்பிட்டு வரலாம்.  இதில் க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளதால் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.   பாதாமின் மேலும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.  

பாதாமில் புரதம் அதிகமாக இருப்பதால் அதனை அளவாகவே சாப்பிட வேண்டும்.  ஒரு கைப்படி பாதாம் சாப்பிடுவதே உடலுக்கு போதுமானது.  பலவகையான இனிப்புகளில் பாதாம் சேர்க்கப்படுகிறது.  காலை நேரத்தில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது மிகவும் நல்லது.  சியா விதைகள், ஆளி விதை, பூசணி விதை மற்றும் பாதாம் ஆகியவை சேர்த்து சாப்பிடலாம். Listen to the latest songs, only on JioSaavn.com

59k9p678
 

ஸ்வீட் சில்லி பாதாம் ரெசிபி மிகவும் எளிமையானது.  இதில் ஆரோக்கியம், மணம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்திருக்கிறது.  பாதாம், முட்டையின் வெள்ளை கரு, கறிவேப்பிலை, உப்பு, சர்க்கரை மற்றும் மிளகாய் தூள் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி மிகவும் ருசியாக இருக்கும்.  புரதமும் நார்ச்சத்தும் நிறைந்த இந்த ரெசிபியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.  

 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement