ஊத்தாப்பத்தை இன்னும் ஹெல்தியாக செய்வது எப்படி??

உடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஊத்தாப்பத்தை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 01, 2019 14:12 IST

Reddit
High Protein Diet: This Healthy Version Of 'Uttappam' Is Sure To Boost Your Weight Loss Diet
Highlights
  • சோயாவில் புரதம் அதிகமாக உள்ளது.
  • அடிக்கடி சோயா உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
  • இந்த ஹெல்தி ஊத்தாப்பத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

தென்னிந்தியாவின் பிரபலமான உணவுகளுள் ஊத்தாப்பமும் ஒன்று.  இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.  ஊத்தாப்பம் தயாரிப்பதற்கு மாவு நன்கு புளித்திருக்க வேண்டும்.  மாவு நன்கு புளித்திருந்தால் மட்டும் பத்தாது.  அத்துடன் நாம் சேர்க்கக்கூடிய உணவு பொருட்களை கொண்டுதான் அதன் ருசி அதிகரிக்கும்.  உதாரணமாக, ஊத்தாப்பம் தயாரிக்கும்போது, அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.  இன்னும் சிலர் அத்துடன் மஷ்ரூம் மற்றும் சோளம் சேர்த்து செய்வார்கள்.  உடல் எடை குறைக்க ஆரோக்கியமான மற்றும் ருசியான ஊத்தாப்பத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

ஊத்தாப்பம் தயாரிப்பதற்கு சோயா மாவு சேர்க்கலாம்.  சோயா மாவில் புரதம் நிறைந்திருக்கிறது.  உடல் தசைகளை வலுவாக்க புரதம் மிகவும் அவசியமானது.  புரதம் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருப்பதுடன், செரிமானம் எளிமையாகிறது.  பசியை தூண்டும் க்ரெலின் என்னும் ஹார்மோனை தடுத்து, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  சோயா மாவுடன், ரவை சேர்த்து, அத்துடன் வெங்காயம், தக்காளி, சீரக தூள், மிளகு, உளுந்து, கடுகு , பெருங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவை சேர்த்து ஊத்தாப்பம் தயாரித்தால் ஆரோக்கியமாகவும், ருசியாகவும் இருக்கும்.  இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

jgqrmm7

இது குடல் ஆரோக்கியத்திற்கும் செரிமானத்திற்கும் நல்லது.  உடலில் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.  இதன் ருசி உங்கள் நாவின் சுவை அரும்புகளை மலர செய்யும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement