நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததா ப்ரோக்கோலி!!

ஒரு கைப்பிடி அளவு ப்ரோக்கோலி, வெண்ணெய், பூண்டு, உப்பு மற்றும் பாதாம் சேர்த்து தயாரித்து சாப்பிடலாம்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 24, 2019 17:35 IST

Reddit
Diabetes Diet: This High-Fibre Vegetarian Breakfast Is Ideal For Diabetics

கடந்த 10-15 வருடங்களில் நீரிழிவு நோய் உலகளவில் பெரும்பாலான மக்களை பாதித்துள்ளது.  நம் வாழ்வியல் முறையில் ஏற்படும் குறைபாடுதான் இந்த நீரிழிவு நோய்.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2030 ஆம் ஆண்டில் 98 மில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சில முயற்சிகளை நீங்கள் எடுக்காவிட்டால், உடல் பருமன், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இருதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.  நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பொரித்த மற்றும் துரித உணவுகளை சாப்பிடக்கூடாது.  மேலும் செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  

நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவான உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.  ப்ரோக்கோலி மற்றும் பாதாம் இரண்டையும் சேர்த்து காலை உணவாக சாப்பிடலாம்.  இதில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைவான க்ளைசமிக் இண்டெக்ஸ் இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.  

பாதாம் பருப்பிலும் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கிறது.  சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஆரோக்கியம் சேர்க்கக்கூடிய இந்த பாதாமை தினமும் உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது.  இந்த ரெசிபியை மிக எளிதில் தயாரிக்கலாம்.  ஒரு கைப்பிடி அளவு ப்ரோக்கோலி, வெண்ணெய், பூண்டு, உப்பு மற்றும் பாதாம் சேர்த்து தயாரித்து சாப்பிடலாம்.  

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement