புரதம் நிறைந்த சாலட் தயாரிப்பது எப்படி?

காலை உணவாக தினையுடன் மாம்பழம், தர்பூசணி, அவகாடோ மற்றும் வெள்ளரி போன்ற பழங்களை சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்க முடியும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 01, 2019 16:50 IST

Reddit
Weight Loss: This High-Protein, Low-Cal Quinoa Fruit Salad Is All You Need To Shed Quick Kilos
Highlights
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தினையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.
  • 100 கிராம் தினையில் 14 புரதம் உள்ளது.
  • இந்த சாலட்டில் 7 கிராம் நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி சாப்பிடலாம்.

முழு தானியங்கள், நார்ச்சத்து, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைக்கலாம்.  தினை உணவுகளில் புரதம் நிறைந்திருக்கிறது.  100 கிராம் தினையில் 14 கிராம் புரதம், 7 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.  தினையுடன் பழங்களை சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.  காலை உணவாக தினையுடன் மாம்பழம், தர்பூசணி, அவகாடோ மற்றும் வெள்ளரி போன்ற பழங்களை சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்க முடியும்.  



சாலட் தயாரிக்க:

ஸ்ப்ரிங் சாலட் - 2 கப் 

தர்பூசணி - 1 கப் 

மாம்பழம் - 1 கப் 

வெள்ளரி - 1/2 கப் 

அவகாடோ - 1/2 கப் 

தினை - 1/3 கப் 

வினிகர் - 1 மேஜைக்கரண்டி 

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி 

ஆலிவ் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 

சர்க்கரை - 1 தேக்கரண்டி 

உப்பு - 1/2 தேக்கரண்டி 

மிளகு -  1/4 தேக்கரண்டி 

இஞ்சி சாறு - 1 தேக்கரண்டி 



Listen to the latest songs, only on JioSaavn.com

செய்முறை:

ட்ரெஸ்ஸிங் தயாரிக்க ஒரு பௌலில் எண்ணெய், எலுமிச்சை, வினிகர், சர்க்கரை, இஞ்சி சாறு, மிளகு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  இதனை தனியே எடுத்து வைக்கவும்.  ஸ்ப்ரிங் சாலட், தர்பூசணி, வெள்ளரி, மாம்பழம், அவகாடோ, தினை ஆகியவற்றை சேர்த்து அத்துடன் ட்ரெஸ்ஸிங் செய்து சாப்பிடலாம்.  ஆரோக்கியம் நிறைந்த இந்த சாலட் உடல் எடை குறைக்க சாப்பிடலாம்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement