புரதம் நிறைந்த இறால் சாலட் சாப்பிட்டிருக்கிறீர்களா??

செரிமானத்திற்கு இரண்டு பழங்களுமே உகந்தது.   இந்த ரெசிபியில் ஆலிவ் எண்ணெய், நிலக்கடலை, ஸ்ப்ரிங் ஆனியன் ஆகியவற்றின் நன்மைகள் அடங்கியிருக்கிறது.   

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 19, 2019 16:05 IST

Reddit
Weight Loss: This High-Protein Salad Is Ideal For Days You Are In No Mood To Cook
Highlights
  • இறாலில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கிறது.
  • புரதம் சாப்பிடுவதால் தசைகள் வலுவாகிஅது.
  • இறாலில் புரதம் அதிகமாக இருக்கிறது.

புரதம் நிறைந்த சாலட்களை சாப்பிட்டு அலுத்து போயிருக்கிறீர்களா?? அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ற காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு சாலட் தயாரித்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  கீரைகள், விதைகள் தவிர்த்து லிச்சி  மற்றும் இறால் கொண்டு சாலட்டை எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.  இதில் புரதம் மிகுதியாக இருக்கிறது.  உடல் எடை குறைக்க இந்த சாலட்டை சாப்பிடலாம்.   

உடல் எடை குறைப்பிற்கான டயட்டை நீங்கள் பின்பற்றுபவர்களானால் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  தசைகளை வலுவாக்கவும், செரிமானத்தை சீராக்கவும், உங்களை நிறைவாக வைத்திருக்கவும் புரதம் சாப்பிடலாம்.  100 கிராம் இறாலில் 25 கிராம் புரதம் இருக்கிறது.  கலோரிகளும் இதில் மிக குறைவு என்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம். 



prawns

லிச்சி மற்றும் மாம்பழம் சேர்த்து அருமையான ஃப்ளேவரில் சாலட் தயாரிக்கலாம்.  பருவ மாற்றத்தின்போது கிடைக்கக்கூடிய இந்த லிச்சி பழம் சுவையில் இனிப்பாக இருக்கும்.  மாம்பழம் இனிப்பு சுவையுடன் நார்ச்சத்து மிகுந்ததாக இருக்கிறது.  இவை இரண்டிலுமே ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  செரிமானத்திற்கு இரண்டு பழங்களுமே உகந்தது.   இந்த ரெசிபியில் ஆலிவ் எண்ணெய், நிலக்கடலை, ஸ்ப்ரிங் ஆனியன் ஆகியவற்றின் நன்மைகள் அடங்கியிருக்கிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.com





Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement