கொளுத்தும் வெயிலை சமாளிக்க மட்டுமல்ல.. கொழுப்பைக் குறைக்கும் வெஜிடபிள் ஜூஸ்!

வெள்ளரி சிறந்த செரிமானத்துக்கான உணவாகவும் இருக்கிறது. சரியான செரிமானம் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும். 

एनडीटीवी फूड डेस्क  |  Updated: March 20, 2019 15:40 IST

Reddit
This Is How This Popular Summer Vegetable Juice Helps Burn Belly Fat 

குளிர்காலம் கடந்து விட்டது. கம்பளி ஆடைகளுக்கும், போர்வைகளுக்கும் நன்றி வணக்கம் சொல்லும் காலம் வந்துவிட்டது. ஆம்! சுட்டெரிக்கும் கோடை காலம் இது. கோடை நமக்கு தரும் இன்னொரு நல்ல விஷயம் பலவகையான காய்கறிகள், பழங்கள். எப்பொழுதுமே சீசன் சமயங்களில் கிடைக்கும் பழங்கள் காய்கறிகளே நல்ல பலன்களைத் தரும். இந்த கோடையில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைத் தரும் உணவுகளையே சாப்பிடுங்கள். அதுதான் உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும்.   இதற்கு வெள்ளரிக்காய் ஒரு சிறந்த காய்கறியாகும். விலை குறைவாக இருக்கும் இது உடல் குளிர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

 

hi9hpmm8

வெள்ளரிக்காய் உடலை டீடாக்ஸ் செய்யவும் பயன்படுகிறது. தொடர்ந்து சாப்பிடுவதின் மூலம் உயர் ரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இதில் உள்ள சிலிகா, முக அழகுக்கும், தோலுக்கும் நல்லது. இதயநோய் பாதிப்பிலிருந்தும் தடுப்பதாக 'healing Foods" புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உடல்எடை குறைப்பதில் இந்த வெள்ளரி பெரும் பங்காற்றுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள உடற்பயிற்சியாளர்கள், உணவியல் நிபுணர்கள் பலர் வெள்ளரியை டயட்டில் சேர்க்க சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

 

உடல் எடையைக் குறைப்பில் வெள்ளரி செயல்பட என்னென்ன காரணம்!

1. வெள்ளரியில் 95% தண்ணீர் மட்டுமே இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?  இதனால் தேவையற்ற கலோரிகள் உடலில் சேராமல் தடுக்க முடிகிறது.

2. 0 கலோரி ஃபுட் என்றும் நிபுணர்களால் வெள்ளரி செல்லமாக அழைக்கப்படுகிறது. 100 கிராம் வெள்ளரியில் வெறும் 16 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதன் செரிமானத்தின் போதும் உடலில் பல கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பது கூடுதல் பலன்.

3. 'Healing Foods''  புத்தகத்தில் எழுதப்பட்ட  குறிப்பின்படி, வெள்ளரி சிறந்த செரிமானத்துக்கான உணவாகவும் இருக்கிறது. சரியான செரிமானம் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும். 

4. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க வெள்ளரி ஒரு சிறந்த உணவாகும். இதில் உள்ள 95% தண்ணீர் நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்களைத் தடுக்கிறது.

உடல் எடை குறைக்கும் வெள்ளரி ஜூஸ் 

தேவையானவை: ஒரு மீடியம் சைஸ் வெள்ளர், 2 பெரிய செலரி, ஒரு ஆப்பிள்.

செய்முறை: மிக்ஸியில், வெள்ளரி, ஆப்பிள், செலரி இந்த மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கிளாஸில் ஊற்றினால், ஹெல்தி ப்ரெஷ் ஜூஸ் ரெடி.

ஆப்பிள் மற்றும் செலரி உடல் குறைப்புக்கு ஏற்றது. அதோடு மட்டுமல்லாமல் இந்த ஜூஸில் வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்திருக்கிறது. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement