பட்டன் பொடி இட்லி எப்படி செய்வது?

   |  Updated: August 27, 2018 17:37 IST

Reddit
This Is How You Make Button Podi Idlis At Home

நீங்கள் ஒரு இட்லி பிரியரா ? பொடி மசாலாவுடன் கூடிய இட்லி மாலை நேர சிற்றுண்டிக்கு மிக பொருத்தமான ஐட்டம், எல்லா வயதினறும் இதை ரசித்து சாப்பிடுவதை காணலாம்.

மூன்றே மூன்று எளிய வழிமுறைகளை பின்பற்றி பொடி இட்லி எப்படி செய்யலாம் என்பதை இங்கே காணலாம்:

போடி இட்லிக்கு தேவையானவை :

  • 10-15 பட்டன் இட்லி
  • 2 தேக்கரண்டி நெய்
  • 3-4 தேக்கரண்டி பொடி மசாலா
  • 1 தேக்கரண்டி கடுகு
  • நறுக்கப்பட்ட கொத்தமல்லி
     
 

A post shared by just another foodie (@salad_on_the_side_) on

போடி இட்லி செய்முறை:

1. அடுப்பில் ஒரு கடாயை மிதமான சூட்டில் வைத்து அதில் சிறிது நெய் சேர்க்கவும். நெய் சூடான பிறகு கடுகு சேர்க்கவும்.

2. கடுகு வெடித்த உடன், பட்டன் இட்லிகளை சேர்க்கவும். ஒரு சில நொடிகளுக்கு இட்லிகளை
நன்கு வறுக்கவும், பிறகு பொடி மசாலா சேர்க்கவும்.

3. எல்லா இட்லிகளிலும் மசாலா பிடிக்கும் வரை கிளறவும். மசாலா நன்கு பிடித்தவுடன், அடுப்பை அணைக்கவும்

4. சூடான பொடி இட்லி ரெடி! ஒரு தட்டில் வைத்து சிறிது கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement