ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ரெட் ஒயின்!!

ரெட் ஒயினில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஃப்ளேவனாய்டு, டேன்னின்ஸ் மற்றும் ரெஸ்வரேட்ரால் இருப்பதால் சருமத்தை இளமை தோற்றத்துடன் வைத்திருக்கும்.  

Translated by: Kamala Thavanidhi (with inputs from ANI)  |  Updated: May 27, 2019 14:19 IST

Reddit
This Is What Your Wine Preference Says About You - Why Red Wine Is A Healthier Option

ஒயின் குடிப்பதால் உடலுக்கு சில நன்மைகள் இருக்கிறதென்பதை நாம் அறிவோம்.  ஒயின் குடிப்பதால் தான் நடிகைகளின் சரும அழகு கூடுகிறது என்று நம்மில் பலரும் பேச கேட்டிருப்போம்.  குறிப்பாக ரெட் ஒயின் குடிப்பதால் சருமம் மினுமினுப்பாக இருக்கும் என்பது எல்லோராலும் நம்பப்படும் உண்மை.  ஒயின் குடிப்பதால் நம் மனநிலையும் ஆரோக்கியமாக இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  ஒயிட் ஒயின் குடிப்பவர்களின் மனநிலையானது சற்றே மாறுப்பட்டதாக இருக்கும்.  அவர்கள் பூனை பிரியர்களாக இருப்பார்கள்.  ஆனால் ரெட் ஒயின் குடிப்பவர்கள் நாய் வளர்ப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.  மிகவும் கலகலப்பாக இருப்பார்கள்.  மேலும் அவர்கள் உற்சாகமூட்டும் விஷயங்களை செய்ய துணிவார்கள்.  ரெடி ஒயின் குடிப்பதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.  red wine
 

கலோரிகள் குறைவு:

ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆய்வில், ரெட் ஒயினில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் அதிகபடியாக ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.  இருதய ஆரோக்கியம்:

ரெடி ஒயின் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  உடலுக்கு சரியான அளவில் சேர்த்து கொண்டால் இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவை தடுக்கப்படும்.  ரெடி ஒயினில் டேன்னின்ஸ் மற்றும் ரெஸ்வரேட்ரால் ஆகியவை இருப்பதால் இரத்தம் உறைவதை தடுக்கிறது.  வயது முதிர்ச்சி:

ரெட் ஒயின் சருமத்திற்கு மிகவும் நல்லது.  ஆரோக்கிய நிபுணர்களின் கருத்துபடி, ரெட் ஒயினில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஃப்ளேவனாய்டு, டேன்னின்ஸ் மற்றும் ரெஸ்வரேட்ரால் இருப்பதால் சருமத்தை இளமை தோற்றத்துடன் வைத்திருக்கும்.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com