கொழுப்பு சத்து குறைவான தானிய சாலட்!!

மாலை நேர பசியை போக்க இந்த கினோவா சாலட் செய்து சாப்பிடலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 15, 2019 12:34 IST

Reddit
Weight Loss: This Low Fat, Protein-Rich Quinoa Salad Fits Perfectly In Any Weight Loss Diet
Highlights
  • இந்த புரதம் நிறைந்த ஸ்நாக்ஸை பசிக்கும்போது சாப்பிடலாம்.
  • உடல் எடை குறைக்க சாலட்களை அதிகம் சாப்பிடலாம்.
  • கினோவாவில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.

நீங்கள் உடல் எடை குறைப்பில் கவனமாக இருக்கும்போது புரதம் நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிட வேண்டும்.  சூப் மற்றும் சாலட்டில் புரதம் அதிகமாக இருக்கும்.  பழங்கள், காய்கறிகள், சிக்கன் போன்ற உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதோடு உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.  குறிப்பாக சிறுதானியங்களில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் தான் உடல் எடை குறைக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் இவற்றை பரிந்துரைக்கிறார்கள்.  உதாரணமாக 100 கிராம் கினோவாவில் 14 கிராம் புரதம் மற்றும் 7 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.  கினோவா மற்றும் காய்கறிகள் கொண்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சாலட்டை எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.  

தேவையான பொருட்கள்: 
லீட்யூஸ் - 1 கப் 
அறுகுலா - 1 கப் 
வெள்ளரி - 1 கப் 
தக்காளி - 1 
ஆரஞ்சு - 1 
ஃபெட்டா சீஸ் - 1/4 கப் 
தண்ணீர் - 1 கப் 
கினோவா - 1 கப் ட்ரெஸ்ஸிங் தயாரிக்க: 
வினிகர் - 1 தேக்கரண்டி 
எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி 
ஆலிவ் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
சர்க்கரை - 1 தேக்கரண்டி 
உப்பு - 1/2 தேக்கரண்டி 
மிளகு - 1/4 தேக்கரண்டி 
இஞ்சி சாறு - 1 தேக்கரண்டி 
கடுகு பொடி - 1/4 தேக்கரண்டி 

செய்முறை: 
ஒரு பௌலில் ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, சர்க்கரை, உப்பு, மிளகு, இஞ்சி சாறு, கடுகு பொடி, வினிகர் ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, கினோவாவை சேர்க்கவும்.  மூடி வைத்து சில நிமிடங்கள் வேக வைக்கவும் .  
ஆறுகுலா, லீட்யூஸ், வெள்ளரி, தக்காளி, ஆரஞ்சு ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.  அத்துடன் வேகவைத்த கினோவா சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.  அத்துடன் சீஸ் மற்றும் ட்ரெஸ்ஸிங் சேர்த்து சாப்பிடலாம்.  
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement