நீரிழிவு நோய்க்கு பீன்ஸ் தான் பெஸ்ட்!!

கொண்டைக்கடலை, தட்டப்பயறு, ராஜ்மா, உளுந்து ஆகியவற்றுடன் வெங்காயம், தக்காளி, துளசி, பூண்டு, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.

Written by: Kamala Thavanidhi  |  Updated: August 01, 2019 15:05 IST

Reddit
Diabetes Diet: This Mixed Beans Salad May Help In Controlling High Blood Sugar
Highlights
  • நீரிழிவு நோயாளிகள் க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவான உணவுகளை சாப்பிடலாம்.
  • பயறு வகைகளை அதிகம் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • பயறுகளை கொண்டு சாலட் செய்வது மிகவும் எளிமையானது.

 நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொருத்துதான் நம் உடல் ஆரோக்கியம் அமையும்.  நம் உணவு பழக்கத்தை சீராக்கி கொண்டால் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் பிரச்னைகள் ஏற்படாது.  உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காதபோதும், உடற்பயிற்சியின்மை காரணமாகவும் நீரிழிவு நோய் உண்டாகும்.  நீரிழிவு நோய் இருப்பவர்கள் சர்க்கரை, கலோரிகள், சோடியம் மற்றும் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  சூப், சாலட் போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம்.  குறிப்பாக தானிய வகைகளை உட்கொள்ளலாம்.  

0ci30jcg

 

நன்மைகள்: 
பயறு வகைகளில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கிறது.  இவற்றில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது.  சோடியம் துளியும் இருப்பதில்லை என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு.  
இதில் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் இருப்பதால் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கிறது.  
இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் இருப்பதால் செரிமானம் தாமதமாகும்.  இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். 
கொழுப்பு சத்து மிகவும் குறைவாக இருக்கும் இந்த பயறு வகைகளில் புரதம், கால்சியம், மக்னீஷியம், ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது.  

Listen to the latest songs, only on JioSaavn.com

கொண்டைக்கடலை, தட்டப்பயறு, ராஜ்மா, உளுந்து ஆகியவற்றுடன் வெங்காயம், தக்காளி, துளசி, பூண்டு, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.  இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.  இது உங்களை நாள் முழுக்க உற்சாகத்துடன் வைத்திருக்கும்.  மேலும் இரத்த சர்க்கரை அளவும் சீராக இருக்கும். Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement