மலச்சிக்கலை போக்கும் பருப்பு கீரை சூப்!

   |  Updated: January 05, 2019 18:02 IST

Reddit
This Mung Bean And Spinach Soup May Help Keep Constipation At Bay

சுவைக்காக மட்டுமே உணவை சாப்பிடும்போது செரிமானம் சீராக இருக்காது. செரிமானம் சீராக இல்லாத போது, மலச்சிக்கலும் ஏற்படும். மலச்சிக்கலை போக்க உடலுக்கு நார்ச்சத்து தேவை. நார்ச்சத்து மற்றும் பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, மலச்சிக்கலை தடுக்க இந்த ரெசிபியை முயற்சி செய்யுங்கள்.

ஹெல்தி சூப்
பச்சை பயறு - 2 கப்
சின்ன வெங்காயம் - 3, பொடியாக நறுக்கியது
இஞ்சி – சுவைக்கேற்ப
பூண்டு – 1
மஞ்சள் தூள் – ¼ மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தூள் – ¼ மேஜைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் – ½ மேஜைக்கரண்டி
வெஜிடபிள் ஸ்டாக் – 2 கப்
கீரை – 11/2 கப்
எலுமிச்சை – 1
உப்பு மற்றும் மிளகு தூள்
சிலாண்ட்ரோ – 1 மேஜைக்கரண்டி

செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பச்சை பயறு சேர்த்து இரவு முழுவதும் அல்லது மூன்று நாட்கள் முளைக்கட்ட வைத்து பயன்படுத்தலாம்.
அடுப்பில் சாஸ்பேன் வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும். அத்துடன் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் ஊறவைத்ததை நன்கு கழுவி அதில் சேர்க்கவும்.
அதில் தண்ணீர், ஆலிவ் எண்ணெய் மற்றும் வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும். அத்துடன் உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். எலுமிச்சை மற்றும் சிலாண்ட்ரோ இலை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையையும் சரிசெய்து விடும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement