வெண்டைக்காயில் பக்கோடா செய்து பார்க்கலாமா??

கடலைமாவு, அரிசிமாவு மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து மொருமொருப்பான வெண்டைக்காய் 65 தயாரிக்கலாம்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 27, 2019 13:40 IST

Reddit
Ever Heard Of Bhindi 65? This New Style Of Making Bhindi Is Sure To Take You By Surprise!
Highlights
  • வெண்டைக்காயை பொரித்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
  • வெண்டைக்காயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
  • குழந்தைகளுக்கு வெண்டைக்காய் கொடுத்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

இந்தியா முழுக்க எல்லா பருவ காலத்திலும் கிடைக்கக்கூடிய காய்களுள் வெண்டைக்காயும் ஒன்று.  வெண்டைக்காய் புளிக்குழம்பு மற்றும் பொரியலை விரும்பி சாப்பிடாதவர்களே கிடையாது.  வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக உள்ளது.  வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபகத்திறன் அதிகரிக்கும்.  மேலும் மலச்சிக்கல் நீங்கும்.  இப்போது வெண்டைக்காயில் ருசியான பக்கோடா எப்படி செய்வதென்று பார்ப்போம்.  

கடலைமாவு, அரிசிமாவு மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து மொருமொருப்பான வெண்டைக்காய் 65 தயாரிக்கலாம்.  வெண்டைக்காய் 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.  தேவையான பொருட்கள்: 
இஞ்சி - 1/2 துண்டு 
பூண்டு - 6-7 பற்கள்
பச்சை மிளகாய் - 4-5 
வெண்டைக்காய் - 250 கிராம் 
கடலைமாவு -  1/4 கப் 
அரிசி மாவு - 1/4 கப் 
மிளகாய் தூள் - 11/2 தேக்கரண்டி 
சீரகம் - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.  ஒரு பௌலில் நறுக்கிய வெண்டைக்காயில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், அரைத்த இஞ்சி பூண்டு விழுது, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  பின் அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ளதை பொரித்தெடுக்கவும்.  பின் சிறிதளவு கடலை, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.  பின் பொரித்தவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும்.  அதன்மேல் மாங்காய் தூள் மற்றும் சாட் மசாலா தூவி கொள்ளவும்.  இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement