செரிமானத்தை தூண்ட ஆப்பிள் மற்றும் கற்றாலை ஜூஸ்!!

கற்றாலையில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கும்.  மலச்சிக்கலை போக்கி குடலில் உள்ள புழுக்களையும் வெளியேற்றுகிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 22, 2019 14:20 IST

Reddit
Drink This Nutrient-Rich Apple And Aloe Vera Juice To Boost Digestion
Highlights
  • ஆப்பிள் மற்றும் கற்றாலையில் நார்ச்சத்து இருக்கிறது.
  • இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

உணவை தவிர்ப்பது, அதிகபடியாக சாப்பிடுவது, துரித உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதனால் ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படும்.  இதனால் முக்கியமாக பாதிக்கப்படுவது செரிமான மண்டலம்.  செரிமானம் சீராக இல்லாதபோது உடலில் மற்ற உறுப்புகளும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது.  செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைப்பதுடன், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற ஆப்பிள் மற்றும் கற்றாலை சாறு உதவுகிறது.  இவை இரண்டையும் கொண்டு ஜூஸ் தயாரிப்பதால் ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக இருக்கிறது.  இதில் கூடுதலாக இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்து கொள்ளலாம். 

kfqu6ie

 

கற்றாலையில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கும்.  மலச்சிக்கலை போக்கி குடலில் உள்ள புழுக்களையும் வெளியேற்றுகிறது.  மஞ்சளில் இறுக்கம் மற்றும் வலியை குறைத்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.  இஞ்சி செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கும்.  ஆனால் இஞ்சி உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால், ஏற்கனவே இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சியை தவிர்த்திடலாம். தேவையானவை:

ஆப்பிள் -1

கற்றாலை – 1

மஞ்சள் – 1 இஞ்ச்

இஞ்சி – 1 இஞ்ச்செய்முறை:

இஞ்சி மற்றும் மஞ்சளின் தோல் நீக்கி, சுத்தமாக கழுவி கொள்ளவும்.  சிறு துண்டுகளாக இதனை வெட்டி கொள்ளவும்.  ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 

கற்றாலையை சுத்தமாக கழுவி பின், அதன் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். 

கற்றாலை, ஆப்பிள், இஞ்சி, மஞ்சள் ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து ஒரு க்ளாஸில் ஊற்றி பருகலாம். 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement