புரதம் நிறைந்த இரவு உணவு!

Deeksha Sarin  |  Updated: December 21, 2018 18:42 IST

Reddit
This Protein-Packed Dinner May Help You In Your Weight Loss Journey

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளே உடலுக்கு சிறந்தது. இவை இரண்டு மட்டுமே உடல் எடை அதிகரிக்க செய்யாது. முட்டைகோஸ், தக்காளி, சாமை, வால்நட் மற்றும் க்ரான்பெர்ரீஸ் ஆகியவை உடல் எடை குறைக்க சிறந்த உணவுகள். அத்துடன் கல் உப்பு சேர்த்து சாப்பிட்டால் அதன் ருசி இன்னும் அதிகமாக இருக்கும். மூன்று வேளையும் தவறாமல் உணவு உண்பதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

சாமையில் அதிகபடியான புரதம் மற்றும் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது உங்கள் தசை வளர்ச்சிக்கு உகந்தது. தக்காளியில் லைகோபீன் இருப்பதால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி செரிமானத்தை மேம்படுத்துவதில் முட்டைகோஸின் பங்கு அதிகம். ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து உடல் எடையை குறைக்க உதவும். வால்நட்டில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இதனையும் உணவில் செர்ர்த்து கொள்ளலாம். இவை உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். அதேபோல் க்ராபெர்ரீஸில் ப்ராந்தோசையனிடின் இருப்பதால் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ளும். இவற்றை உங்கள் இரவு உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement