ஆப்பிள் ஸ்மூத்தி குடித்திருக்கிறீர்களா?? இல்லையென்றால் இதை ட்ரை பண்ணுங்க!!

உடல் எடை குறைக்க யோகர்ட், ஆப்பிள் மற்றும் சியா விதை ஆகியவற்றை சேர்த்து ஸ்மூத்தி செய்து குடித்து வரலாம்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 04, 2019 18:48 IST

Reddit
High-Protein Diet: This Protein-Rich Apple And Chia Smoothie Is Sure To Keep Cravings At Bay!
Highlights
  • உடல் எடை குறைப்பதற்கு மன அடக்கம் வேண்டும்.
  • புரதம் க்ரெலின் என்னும் பசியை தூண்டக்கூடிய ஹார்மோனை சீராக வைக்கிறது.
  • சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதம் இருக்கிறது.

உங்களுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் பழங்கள், விதைகள், கொட்டைகள் மற்றும் யோகர்ட் சேர்த்து ஆரோக்கியமான ஸ்மூத்தி தயாரித்து குடிப்பது தான் இந்த கோடைக்காலத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி.  பொதுவாகவே ஸ்மூத்தியில் புரதம் அதிகமாக இருக்கும்.  தசைகளின் ஆரோக்கியம் காக்கும் இந்த ஸ்மூத்தியை குடிப்பதால் பசியை தூண்டக்கூடிய க்ரெலின் ஹார்மோனை சீராக வைக்கிறது.  உடல் எடை குறைக்க உதவுகிறது.  புரதம் நிறைந்த ஆப்பிள் சியா ஸ்மூத்தியை எப்படி தயாரிப்பது மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.  

யோகர்ட்: 
யோகர்ட்டில் புரதம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  இதனால் எலும்புகள் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கும்.  

சியா விதைகள்: 
100 கிராம் சியா விதையில், 17 கிராம் புரதம் இருக்கிறது.  இதில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  
 

vrsoj84g

 

ஆப்பிள்: 
ஆப்பிளில் பெக்டின் என்னும் நார்ச்சத்து இருப்பதால் செரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கிறது.  உடல் எடை குறைக்க அடிக்கடி ஆப்பிள் சாப்பிடலாம்.  

உடல் எடை குறைக்க யோகர்ட், ஆப்பிள் மற்றும் சியா விதை ஆகியவற்றை சேர்த்து ஸ்மூத்தி செய்து குடித்து வரலாம்.  
 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement