உடல் எடை குறைக்க உதவும் 5 பருப்புகள்!!!

கடலைப்பருப்பில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை  இருப்பதுடன் ஃபோலேட், காப்பர், நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம் மற்றும் சிங்க் இருக்கிறது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 17, 2019 13:06 IST

Reddit
High-Protein Diet: This Protein-Rich Panchratna Dal May Help You Lose Weight

இந்திய சமையல்களில் பருப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று.  தினசரி நம் உணவில் வெவ்வேறு வடிவமாக பருப்பு பயன்படுத்தப்படுகிறது.  பக்கோடா, அல்வா, சூப், கிரேவி மற்றும் இனிப்பு வகைகளில் கூட பருப்புகள் பயன்படுத்தப்படுகிறது.  பருப்பு வகைகளில் ஏராளமான புரத சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  எந்தெந்த பருப்புகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.   

lentil 

 

நன்மைகள்:

புரதம் சாப்பிடுவதால் தசைகள் உறுதியாகும்.  செரிமானம் சீராகி உடல் எடை குறைக்கவும் பயன்படுகிறது.  பசியை தூண்டக்கூடிய க்ரெலின் என்னும் ஹார்மோன் அளவை குறைத்து பசியை போக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  புரதம் நிறைந்த சில பருப்பு வகைகளை பார்ப்போம்.  

1. உளுந்து: 

உளுத்தம் பருப்பில் புரதம் அதிகமாக இருக்கிறது.  அத்துடன் இதனை சாப்பிடுவதால் செரிமானம் தூண்டப்பட்டு, கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

2. கடலைப்பருப்பு: 

கடலைப்பருப்பில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை  இருப்பதுடன் ஃபோலேட், காப்பர், நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம் மற்றும் சிங்க் இருக்கிறது. 

3. பச்சைப்பயிறு: 

பச்சைப்பயிறில் நார்ச்சத்து, மக்னீஷியம், மாங்கனீஸ், ஃபோலேட், வைட்டமின் பி மற்றும் பொட்டாஷியம் இருக்கிறது.   

4. மசூர் பருப்பு: 

இதில் பொட்டாஷியம், எசன்ஷியல் அமினோ அமிலம், இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி1 ஆகிய சத்துக்கள் இருப்பதால் இரத்த சர்க்கரை அளவையும் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. 

5. துவரம் பருப்பு: 

கால்சியம், வைட்டமின் பி, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாஷியம் போன்ற சத்துக்கள் துவரம் பருப்பில் இருப்பதால் உடல் எடை குறைக்க சாப்பிடலாம். 

பஞ்சரத்னா தால்: 

மேற்கூறிய பருப்புகளை ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.  மஞ்சள் தூள், சீரகம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், பெருங்காயம், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து சுவையான பஞ்சரத்னா தால் ரெசிபியை ராஜஸ்தான் ஸ்டைலில் செய்து சாப்பிடலாம்.  Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்கள்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement