நீரிழிவு நோயாளிகளுக்கான ஸ்பெஷல் சாலட்!!

கினோவாவை போலவே, காராமணியிலும் நார்ச்சத்து மற்றும் புரதம் இருக்கிறது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 16, 2019 16:28 IST

Reddit
Diabetes Diet: This Quinoa And Black Bean Salad Is An Ideal Meal For Stable Blood Sugar Level
Highlights
  • நீரிழிவு நோயாளிகளுக்கு கினோவா உகந்த உணவு.
  • காராமணியில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
  • இந்த சாலட்டை இரவு நேரத்தில் சாப்பிடலாம்.

நம் உணவின் தரத்தை பொருத்து நம் உடல் ஆரோக்கியம் அமையும்.  குறிப்பாக நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதும் இல்லாமல் போவதும் நாம் சாப்பிடக்கூடிய உணவை பொருத்தே அமையும்.  இரத்த சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய உணவு பொருட்களை சாப்பிடுவதே சிறந்தது.  முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி, உறக்கம் ஆகியவற்றை பின்பற்றினாலே போதும் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு குறைவான உணவை சாப்பிட்டு வரலாம்.  கினோவாவில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.  இதில் கலோரிகள் மிகவும் குறைவு.  இதனை சாலட் போல செய்து தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.  

கினோவாவின் நன்மைகள்: 

1. கினோவாவில் க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு குறைவாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.,  

2. இதில் பொட்டாஷியம் அளவு அதிகமாகவும், சோடியத்தின் அளவு குறைவாகவும் இருக்கிறது. 

3. புரதம், நார்ச்சஹ்து மற்றும் அமினோ அமிலம் ஆகியவை நிறைந்திருக்கிறது. 

4. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், கால்சியம் மற்றும் வைட்டமின் பி சத்து இருக்கிறது. 

 
 

h6q37hjo

 

 

கினோவா மற்றும் காராமணி இரண்டுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டியவை.  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த இரண்டுமே இரத்ததில் சர்க்கரை அளவை குறைக்கிறது.  கினோவாவை போலவே, காராமணியிலும் நார்ச்சத்து மற்றும் புரதம் இருக்கிறது.  கலோரிகள் குறைந்த இந்த சாலட்டை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.   

தேவையானவை: 

கினோவா - அரை கப் 

காராமணி - அரை கப் 

தண்ணீர் - ஒரு கப் 

வெங்காயம் - 2 

தக்காளி - 2 

கொத்தமல்லி இலை - ஒரு கொத்து 

ஆலிவ் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி 

சீரக தூள் - 1 தேக்கரண்டி 

உப்பு மற்றும் மிளகு - தேவைக்கேற்ப

செய்முறை: 

1. கினோவாவில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.  வெந்தபின் தனியே எடுத்து வைக்கவும். 

2. ஒரு பெரிய பௌலில் வேக வைத்த கினோவா, காராமணி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளவும். 

3. ஒரு தனி பௌலில் ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு மற்றும் சீரக தூள் ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

4. கலந்து வைத்துள்ள கலவையை சாலட் மீது சேர்க்கவும். 

5. சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து பின் பரிமாறலாம். Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement