Edited by: Kamala Thavanidhi | Updated: September 22, 2019 12:31 IST
சிவப்பு காராமணியில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக இருக்கிறது. உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள காராமணியை கொண்டு சாலட் செய்து சாப்பிடலாம். காராமணியில் புரதம் நிறைந்துள்ளது. 100 கிராம் காராமணியில் 24 கிராம் புரதம் இருக்கிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக இருக்கும். இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய இந்த காராமணி உங்களை நிறைவாக வைத்திருக்கும். மேலும் உடல் எடை குறைக்க உதவும் இந்த காராமணி க்ரெலின் என்னும் பசியை தூண்டக்கூடிய ஹார்மோனை சீராக சுரக்க செய்யும். இதில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
காராமணி சாலட் ரெசிபி தயாரிக்க:
உடல் எடை குறைக்க இந்த காராமணி சாலட் ரெசிபியை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பார்ப்போம். சிவப்பு காராமணி, குடைமிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன், காட்டேஜ் சீஸ், பச்சை மிளகாய், முள்ளங்கி, ஆலிவ் எண்ணெய், இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், ஆரஞ்சு தோல் துருவல் போன்றவற்றை சேர்த்து சாலட் ரெசிபியை தயாரிக்கலாம். பசி நேரத்தில் இந்த சாலட்டை செய்து சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.