காரசாரமான மோர் குடித்திருக்கிறீர்களா?

மோரில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரக தூள் சேர்த்தால் அதன் ருசி தனித்துவமாக இருக்கும். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 20, 2019 19:30 IST

Reddit
Summer Drink: This Spiced Buttermilk (Chaas) Will Keep You Cool This Season
Highlights
  • மோர் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
  • தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  • இந்த ஸ்பைஸி மோரில் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்க்கலாம்.

கோடை வந்ததும் குளிர்பானங்களும் பெருகிவிட்டது.  குளிர்பானங்கள் என்றால் கடைகளில் கிடைக்கும் ரஸ்னா, பெப்ஸி, ஃப்ரூட்டி போன்றவை அல்ல.  மாறாக, மோர், எலுமிச்சை சாறு, இளநீர், பதநீர், சர்பத் போன்றவை.  இவற்றை குடிக்கும்போது உடலில் உள்ள சூடு தணிந்து உடல் குளிர்ச்சியடையும்.  குறிப்பாக பழச்சாறுகள், மில்க்‌ஷேக், ஸ்மூத்தீஸ் போன்றவற்றை குடிக்கும்போது வெப்பத்தால் உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுக்கலாம்.  கோடை வெப்பத்தால் உடலில் வியர்வை மற்றும் நீரிழப்பு ஏற்படும்.  அதிகபடியான நீராகாரம் குடித்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  தற்போது, மோரை இன்னும் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.  Listen to the latest songs, only on JioSaavn.com

தண்ணீர் குறைவாகவும், தயிர் அதிகமாகவும் இருந்தால் அது லஸ்ஸி.  அதில் சர்க்கரை அல்லது உப்பு மற்றும் மிளகு சேர்த்து குடிக்கலாம்.  ஆனால் மோரில், தயிர் குறைவாகவும், தண்ணீர் அதிகமாகவும் இருக்கும்.  கோடை காலத்தில் அடிக்கடி மோர் குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.  தயிரில் ப்ரோபையோடிக்ஸ் என்று சொல்லப்படும் நல்ல பாக்டீரியா இருக்கிறது.  இது உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது.  மேலும் குடல் மற்றும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  மோரில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரக தூள் சேர்த்தால் அதன் ருசி தனித்துவமாக இருக்கும்.  மேலும் இதில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து கொள்ளலாம்.  இது ருசியை அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.  இந்த ஸ்பைசி மோரை வீட்டில் இன்றே தயார் செய்து பாருங்கள்.  Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement