இரத்த அழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழ ஸ்மூத்தி!!

வாழைப்பழம் மற்றும் கீரை ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் ஸ்மூத்தியில் பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் சீராகிறது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 21, 2019 16:43 IST

Reddit
High Blood Pressure? This Spinach And Banana Smoothie May Help Keep Your BP In Check
Highlights
  • கீரைகளில் பொட்டாஷியம் நிறைந்திருப்பதால் அடிக்கடி சாப்பிடலாம்.
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
  • நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகிய சத்துக்கள் கீரைகளில் நிறைந்திருக்கிறது.

இருதய நோய்களை ஏற்படுவதற்கு முக்கிய காரணமே உயர் இரத்த அழுத்தம்தான். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால், பக்கவாதம், ஏற்படவும் வாய்ப்புள்ளது.  சோடியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.  உடலில் நீர்ச்சத்து குறைந்து, இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.  பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், உடலில் சோடியத்தின் அளவு குறையும்.  

பழங்களுள் வாழைப்பழத்தில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது.  100 கிராம் வாழைப்பழத்தில் 358 மில்லிகிராம் பொட்டாஷியம் இருக்கிறது.  அதேபோல கீரைகளிலும் பொட்டாஷியம் நிறைந்திருக்கிறது.  100 கிராம் கீரையில் 558 மில்லிகிராம் பொட்டாஷியம் இருக்கிறது.  இவற்றில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் இருதய நோய்கள் தடுக்கப்படுகிறது.  மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய் அபாயத்தையும் தடுக்கிறது.  கீரை மற்றும் வாழைப்பழம் சேர்த்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஸ்மூத்தியை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.  

தேவையானவை: 

வாழைப்பழம் - 2 

கீரை - 1 கப் 

ஆரஞ்சு சாறு - 3 மேஜைக்கரண்டி 

செய்முறை: 

* மிக்ஸியில் வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு சாறு சேர்த்து அரைத்து கொள்ளவும். 

* அத்துடன் கீரைகளையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். 

* இந்த ஸ்மூத்தி கெட்டியாக இருப்பதாக நினைத்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். 

* இந்த ஸ்மூத்தியில் ஆளிவிதை, சியா விதை அல்லது பூசணி விதையை தூவி பரிமாறலாம்.  


 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement