உயர் இரத்த அழுத்தத்திற்கு செலரி ஜீஸ்!!

கீரை மற்றும் செலரி இரண்டிலும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க கூடிய தன்மை இருக்கிறது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: September 09, 2019 10:58 IST

Reddit
Hypertension Diet: This Spinach And Celery Juice May Help In Regulating High Blood Pressure
Highlights
  • கீரை மற்றும் செலரியில் நார்ச்சத்து அதிகம்.
  • இவை இரண்டுமே இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடியது.
  • இரத்த அழுத்தம் சீராக செலரி ஜூஸ் குடித்து வரலாம்.

வாழ்வியல் முறையில் ஏற்படும் சிக்கல் காரணமாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.  நாம் சாப்பிடக்கூடிய துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்த பிரச்னை ஏற்படுகிறது.  இதனால் இருதய நோய்களும் ஏற்படும்.  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை, குறிப்பாக பொட்டாஷியம் அளவு நிறைந்த உணவுகளை உட்கொண்டால் இரத்த அழுத்தம் சீராகும்.  உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க கூடிய காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.  

கீரை மற்றும் செலரி இரண்டிலும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க கூடிய தன்மை இருக்கிறது.  இவற்றில் சாறு எடுத்து அருந்தலாம்.  கீரையில் நார்ச்சத்து, பொட்டாஷியம் இருப்பதால் இரத்த நாளங்களில் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.  இதில் மக்னீஷியமும் இருப்பதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது.  செலரியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடை குறைக்க உதவுகிறது.  மேலும் கொலஸ்ட்ராலை குறைக்கக் கூடிய தன்மையும் இருக்கிறது.  

qf0f60o

 

 தயாரிக்க: 
* கீரைகளை சிறிதளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும்.  
* இரண்டு அல்லது மூன்று செலரியை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 
* கீரை ஆறிய பிறகு அதனை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.  அத்துடன் செலரி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு அல்லது வெள்ளரி துண்டுகளை சேர்த்து அரைத்து கொள்ளவும்.  
* அதில் உப்பு சேர்க்க வேண்டாம்.  உப்பு சேர்க்கும்போது இரத்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.  
* அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து குடிக்கலாம்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

o72ivl5o

 

 அவ்வப்போது இதனை குடித்து வந்தால் உடலில் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement