இரத்த அழுத்தத்தை குறைக்கும் கீரை சூப்!!

கீரை மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து சூப் தயாரித்து குடிக்கும்போது உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன் இரத்த அழுத்தமும் குறைகிறது. 

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 07, 2019 14:06 IST

Reddit
High Blood Pressure Diet: This Spinach And Chickpea Soup May Help Manage Your BP 
Highlights
  • உயர் இரத்த அழுத்தம் இருதய நோய்களை உண்டாக்கக்கூடியது.
  • இரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
  • அடிக்கடி கீரைகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

தற்போது உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற உடல் உபாதைகள் நம்மில் பலருக்கும் வந்துவிட்டது.  இதற்கு முக்கிய காரணம் நம்முடைய வாழ்வியல் முறையில் ஏற்படும் சிக்கல்தான்.  உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இருதய நோய்களும் வரக்கூடும்.  இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது இருதய செயல்பாடு பாதிப்படைந்து, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.  இரத்த அழுத்தத்தை குறைக்க கீரைகளை உட்கொள்ளலாம்.  கீரையை சாப்பிட பிடிக்காதவர்கள் கீரை சூப் வைத்து குடிக்கலாம்.  ஆரோக்கியம் நிறைந்த கீரை சூப் எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.   

Newsbeep

நாம் சாப்பிடக்கூடிய உணவின் தரத்தை பொருத்துதான் நம் உடல் ஆரோக்கியம் அமையும்.  அதேபோல நாம் எப்படிபட்ட உணவை சாப்பிடுகிறோமோ அதனை பொருத்துதான் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையின் அளவு மாறுபடும்.  உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் எப்போதும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.  இவற்றை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், விதைகள் மற்றும் கொட்டைகளை சாப்பிடலாம்.  மேலும் பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.  

பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, உடலில் சோடியத்தினால் உருவாகும் பிரச்னைகள் தடுக்கப்படும்.  உடலில் சோடியம் அதிகரிக்கும்போது, தானாகவே உடலில் நீரிழப்பு ஏற்படும்.  இரத்த நாளங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும்.  பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது சிறுநீர் வழியாக சோடியம் உடலை விட்டு வெளியேறிவிடும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

s5i43ovo

ஆரோக்கியம் நிறைந்த மற்றும் இருதய ஆரோக்கியத்தை காக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள நினைத்தால் நீங்கள் இரவு உணவாக கீரை சூப் குடிக்கலாம்.  கீரை மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து சூப் தயாரித்து குடிக்கும்போது உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன் இரத்த அழுத்தமும் குறைகிறது.  கீரைகளில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது.  100 கிராம் கீரையில் 558 மில்லிகிராம் பொட்டாஷியம் இருக்கிறதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?  மேலும் கீரைகளில் மக்னீஷியம் இருப்பதால் தசைகளை இறுக்கத்தை தளர்த்துகிறது.  அதேபோல கொண்டைக்கடலையில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் சீராகிறது.  மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு உடல் எடையும் குறைக்கவும் உதவுகிறது.  கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியாம் சீராக இருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement