சளி தொல்லையை போக்கும் மூலிகை கஷாயம்!!

இரவு தூங்க போகும்முன் அரை மணி நேரத்திற்கு முன் இந்த கஷாயத்தை குடித்து வரலாம்.  இதில் ஒரு சிட்டிகை பட்டை தூள் சேர்ப்பதால் தொண்டை கரகரப்பை உடனடியாக போக்குகிறது.    

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 21, 2019 12:44 IST

Reddit
This Traditional Kadha Recipe May Help Soothe Symptoms Of Cold
Highlights
  • தொண்டை கரகரப்பை போக்க பட்டை தூளை சேர்க்கலாம்.
  • துளசி, மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
  • இரவு தூங்கும் முன் இதனை குடித்து வந்தால் முக்கடைப்பு நீங்கும்.

மழைக்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால் மிக எளிதில் நோய் தொற்று ஏற்படும்.  இதனால் இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக்கரகரப்பு போன்றவை உண்டாகும்.  இதனை தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடலாம்.  அந்த காலத்தில் நம் முன்னோர்கள் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியம் நிறைந்த மூலிகை பொருட்களை சேர்த்து கஷாயம் தயாரித்து குடிப்பார்கள்.  அப்படியான மூலிகை பொருட்களை கொண்டு வீட்டிலேயே எப்படி கஷாயம் தயாரிப்பதென்று பார்ப்போம்.  

qg9vf9sg

 

Newsbeep

நாம் தினசரி பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்களில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.   கஷாயம் தயாரிக்க தேவையான பொருட்களை பார்ப்போம்.  

தேவையானவை: 

கிராம்பு - 2 

தண்ணீர் - 11/2 கப் 

இஞ்சி சாறு - 2 தேக்கரண்டி 

மிளகு தூள் -1 தேக்கரண்டி 

துளசி இலை - 3 

பட்டை தூள் - 1 சிட்டிகை. 

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 

தண்ணீர் கொதித்தவுடன் அதில் இஞ்சி சாறு, துளசி இலைகள் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.  

2-3 நிமிடங்கள் கழித்து, அதில் மிளகு தூள், கிராம்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்திருக்கவும். 

நன்கு கொதித்த பின் இதனை சூடாக பரிமாறவும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

இரவு தூங்க போகும்முன் அரை மணி நேரத்திற்கு முன் இந்த கஷாயத்தை குடித்து வரலாம்.  இதில் ஒரு சிட்டிகை பட்டை தூள் சேர்ப்பதால் தொண்டை கரகரப்பை உடனடியாக போக்குகிறது.  

 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement