கோடைக்கு குளிர்ச்சியான ராகி மால்ட் குடிக்கலாம்!!

ராகி மால்ட் குடிப்பதால் உடல் குளிர்ச்சியடைவதோடு ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 06, 2019 16:14 IST

Reddit
Ragi Malt Or Ambali: This Weight-Loss-Friendly South-Indian Drink Is A Delicious Summer Cooler
Highlights
  • இரும்புச்சத்து நிறைந்த ராகி மால்டை குடிக்கலாம்.
  • சைவ பிரியர்களுக்கு சிறந்த புரதம் நிறைந்த பானம் ராகி மால்ட்.
  • முளைக்கட்டிய ராகியில் சத்துக்கள் அதிகமாக உள்ளது.

சிறுதானியங்களை கொண்டு இனிப்பு முதல் காரம் வரை எல்லா ரெசிபிகளையும் தயார் செய்யலாம்.  உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.  ராகியில் ரொட்டி, பராத்தா, லட்டு, பர்ஃபீஸ், கேக் மற்றும் மஃபின் போன்ற ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.  ராகியில் இரும்புச்சத்து இருப்பதால் உடலுக்கு வலிமை சேர்க்கிறது.  ராகி மாவை வேகவைத்து, அதில் தண்ணீர் சேர்த்து ஆறியபின் அதில் தயிர் அல்லது மோர் சேர்த்து, சீரக தூள், உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து குடிக்கலாம்.  அத்துடன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குடித்தால் இன்னும் ருசியாக இருக்கும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

 ராகியின் ஆரோக்கிய நன்மைகள்: 
* ராகியில் நார்ச்சத்து மற்றும் புரதம் இருப்பதால் உடல் எடை குறைக்க இதனை குடிக்கலாம். 
* ராகியில் மோர் சேர்த்து குடிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. 
* ராகியில் கால்சியம் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகிறது.  மேலும் இதில் தயிர் சேர்க்கப்படுவதால் கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கிறது.  
* நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவை நிறைந்திருப்பதால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கிறது.  இருதயமும் ஆரோக்கியமாக செயல்படும். 
* முளைக்கட்டிய ராகியில் வைட்டமின் சி இருப்பதால், இரத்த சோகை குணமாகும். 

 எப்படி தயாரிப்பது:
ராகி மால்டில் சாக்லேட் அல்லது வென்னிலா ப்ரோட்டீன் பௌடர் ஆகியவை சேர்த்து செய்யலாம்.  முளைக்கட்டிய ராகியில் வேகவைத்து சாப்பிடலாம்.  வேகவைத்த ராகியில்,மோர், சீரக தூள், வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.  கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து இத்துடன் சேர்த்து பருக ருசி அருமையாக இருக்கும்.  வீட்டிலேயே இதனை செய்து சாப்பிடலாம்.  ஆரோக்கியம் நிறைந்தது.  (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement