மைக்ரேன் பிரச்னையை உண்டாக்கும் காபி!!

மது மற்றும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு மன அழுத்தம், தூக்க பிரச்னை, மாதவிடாய் பிரச்னை ஆகியவை ஏற்படுகிறது.  

Translated by: Kamala Thavanidhi (with inputs from IANS)  |  Updated: August 10, 2019 17:48 IST

Reddit
Three Cups Of Coffee A Day May Trigger Migraine: Study

நம்மில் பலரும் காபி பிரியர்களாக இருப்பார்கள்.  அது தவிர எப்போது தலைவலி ஏற்பட்டாலும் காபி அல்லது டீ குடிப்பார்கள்.  ஆனால் அதிகபடியாக காபி குடிப்பதாலேயே தலைவலி உண்டாகும் என்றால் நம்ப முடிகிறதா?  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கஃபைன் நிறைந்த பானங்களை பருகுவதால் மைக்ரேன் என்று சொல்லப்படும் ஒற்றை தலைவலி உண்டாகும் என தெரிய வந்துள்ளது.   

98 பேரை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ந்து ஆறு வாரங்கள் நடத்தப்பட்டது.  அதில் அவர்களுக்கு கஃபைனேட்டட் ட்ரிங்க், சோடா, டீ மற்றும் எனர்ஜி ட்ரிங்க் ஆகியவற்றை தொடர்ச்சியாக குடிப்பதால் மைக்ரேன் பிரச்னை ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.  அதுதவிர மது மற்றும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு மன அழுத்தம், தூக்க பிரச்னை, மாதவிடாய் பிரச்னை ஆகியவை ஏற்படுகிறது.  

கஃபைனேட்டட் ட்ரிங்க் குடிப்பதால் தலைவலி அதிகரிக்கும்.  தொடர்ச்சியாக காபி மற்றும் டீ குடிப்பதால் கட்டாயமாக மைக்ரேன் பிரச்னை வரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  கஃபைன் நிறைந்த பானங்கள் தூக்கத்தை தடை செய்கிறது.  காபியில் 25 முதல் 150 மில்லிகிராம் கஃபைன் இருப்பதால் அடிக்கடி காபி குடிப்பதை தவிர்க்கவும். Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement