தொண்டை கரகரப்பை ஏற்படுத்தும் உணவுகள்

குளிர்காலத்தில் சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் வரக்கூடும். இவை உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, உங்களை மேலும் சோர்வாக்கும். சில உணவுகள் உங்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்

   |  Updated: December 21, 2018 17:00 IST

Reddit
3 Foods To Avoid During A Bout Of Sore Throat

குளிர்காலத்தில் சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் வரக்கூடும். இவை உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, உங்களை மேலும் சோர்வாக்கும். சில உணவுகள் உங்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். குறிப்பாக சளி தொல்லை இருக்கும்போது நீங்கள் சில உணவுகளை தவிர்ப்பது அவசியம். தொண்டை கரகரப்பு நீங்க நீங்கள் தவிர்க்க வேண்டிய மூன்று உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

தயிர்
தயிர் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பது எவ்வளவு உண்மையோ அதேபோல சளி பிரச்சனை இருக்கும்போது தயிர் சாப்பிடுவது உடலுக்கு மேலும் கெடுதலை உண்டாக்கும். குறிப்பாக தொண்டையில் பிரச்சனை இருக்கும்போது தயிர் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். தயிர் சாப்பிடும்போது சளி இறுகிவிடும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

ஃப்ரைடு ஃபுட்ஸ்
எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் துரித உணவுகள் உடலுக்கு எப்போதுமே தீங்கு விளைவிக்க கூடியது தான். இவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதனால் எளிதில் நோய் தொற்று ஏற்படும்.

சோடா
குளிர்பானங்கள் மற்றும் ஏரேட்டட் ட்ரிங்க்ஸ் ஆகியவற்றை தொடர்ச்சியாக குடித்து வந்தால் உடல் பருமனாகும். மேலும் தொண்டையில் வீக்கம் ஏற்பட்டு வயிற்று பகுதியையும் கெடுத்துவிடும். இதனால் வயிற்றில் அதிகபடியாக அமிலம் சுரக்கும். சளி தொல்லையில் நீங்கள் அவதிப்பட்டால் சோடா போன்ற குளிர்பானங்களை குடிக்க கூடாது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement