நீரிழிவு நோயாளிகள் ஆளி விதையை சாப்பிடலாமா!!

தொடர்ச்சியாக 12 வாரங்கள் இதனை சாப்பிட்டு வந்தால் ஹீமோக்ளோபின் ஏ1சி அதிகரிப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 19, 2019 12:50 IST

Reddit
Diabetes Diet Tips: How To Eat Flaxseeds If You Are On A Diabetes Diet
Highlights
  • வாழ்வியல் முறையில் ஏற்படும் சிக்கல்தான் நீரிழிவு நோய்.
  • ஆளிவிதையில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
  • இதனை ஊறவைத்து அந்த நீரை குடித்து வரலாம்.

உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோரை பாதித்திருப்பது நீரிழிவு நோய்.  நம் வாழ்வியல் முறையில் ஏற்படும் சிக்கல் காரணமாக உடலில் மெட்டபாலிசம் பாதிக்கப்படுகிறது.  இதனால் உடலில் இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.  நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.  தொடர்ச்சியாக கீரைகள், பருப்புகள், தானியங்கள் போன்றவற்றை சேர்த்து கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  அத்துடன் விதைகள் மற்றும் கொட்டைகளையும் அவ்வப்போது சேர்த்து கொள்வது நல்லது.    

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் ஆளி விதைக்கு பெரும்பங்கு உண்டு.  இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.  இதில் லிகான்ஸ் இருப்பதால் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அடிக்கடி சாப்பிடலாம்.  தொடர்ச்சியாக 12 வாரங்கள் இதனை சாப்பிட்டு வந்தால் ஹீமோக்ளோபின் ஏ1சி அதிகரிப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.  ஆளிவிதையின் மேலும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.  
1. உங்களுக்கு வாயுத் தொல்லை இருந்தால் இதனை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல.  மற்ற விதைகள் மற்றும் கொட்டைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.  ஏனென்றால் ஆளிவிதையில் நார்ச்சத்து அதிகம் என்பதால் இதனை மட்டும் சாப்பிடுவதை தவிர்க்கவும்.  

2. ஆளிவிதை இரவு தூங்க போகும் முன் தண்ணீரில் ஊற வைக்கவும்.  மறுநாள் காலை அந்த நீரை குடித்து வரலாம்.  இரவு முழுவதும் ஊறுவதால் ஆளிவிதை மிகவும் மென்மையாகிவிடும்.  இதனால் சாப்பிடுவதற்கு எளிமையான இருக்கும்.  பழச்சாறுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பானங்களை குடிப்பதற்கு பதிலாக இந்த கலோரி குறைந்த பானத்தை குடிக்கலாம். 

3. ஆளிவிதை சிலரால் அப்படியே மென்று சாப்பிட முடியாது என்பதால் பொடியாக அரைத்து வைத்து கொள்ளலாம்.  தினமும் 10-20 கிராம் ஆளிவிதை பொடியை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறைந்து, உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். 
 

qk4i1qlg

 

4. உங்களுக்கு பிடித்தமான சுவையில் எந்த ரெசிபியை வேண்டுமானாலும் செய்து அதில் இந்த ஆளிவிதை தூவி சேர்த்து கொள்ளலாம்.  உதாரணமாக ரெய்தா, சாலட், சப்பாத்தி மற்றும் பராத்தாவில் சேர்த்து சாப்பிடலாம்.  
 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement