வீட்டில் எறும்புத் தொல்லையில் இருந்து தப்பிக்க உதவும் 8 டிப்ஸ்!

வேர்கடலை போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை பாக்கெட் போட்டு வைத்தாலும், பாக்கெட்டை துளைத்துவிட்டு எல்லாவற்றையும் மொய்த்துவிடும்.

   |  Updated: August 26, 2020 19:42 IST

Reddit
How to Get Rid of Ants: 8 Home Remedies That Do the Trick

எறும்புத் தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில டிப்ஸ்களை இங்குக் காணலாம்.

Highlights
  • Let's face it, ants in your house can be a big nuisance
  • Here are some home remedies to get rid of ants instantly
  • From chalk and salt to black pepper, cinnamon and more

எறும்புத்தொல்லை இல்லாத வீடுகளே இல்லை. மூலை முடுக்குகள், சுவற்றில் இருக்கும் ஓட்டைகள் என எந்த வழியிலாவது எறும்புகள் வந்துவிடும். குறிப்பாக வேர்கடலை போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை பாக்கெட் போட்டு வைத்தாலும், பாக்கெட்டை துளைத்துவிட்டு எல்லாவற்றையும் மொய்த்துவிடும். இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் எறும்பின் மூலமாக உணவில் பரவும். 

சில எறும்புகள் மனிதர்களைக் கடித்துவிடும். மற்றொரு புறம் கரையான்கள், இது கதவு, ஜன்னல் போன்ற மரக்கட்டை பொருட்களை அப்படியே அரித்துவிடும். இவ்வாறு நம்மைச் சுற்றிலும் 12 ஆயிரம் வகையான எறும்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய எறும்புத் தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில டிப்ஸ்களை இங்குக் காணலாம்.

Newsbeep

எறும்புத் தொல்லையில் இருந்து விடுபட.. 

1. சாக்பீஸ்

எறும்புகளை விரட்டுவதற்கு சாக்பீஸ்களைப் பயன்படுத்தலாம். வீட்டு வாசலில் இந்த சாக்பீஸைக் கொண்டு கோடு போடலாம், உணவு பாத்திரங்களை தரையில் வைத்தால், பாத்திரத்தைச் சுற்றிலும் தரையில் கோடு போடலாம். இது ஒரு நல்ல தீர்வாக அமையும்

2. எலுமிச்சை

எலுமிச்சை வாடை எறும்புக்கு பிடிக்காது. எனவே தரையை சுத்தம் செய்யும் போது, தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, தரையைச் சுத்தம் செய்யலாம்.

lemon
How to get rid of ants: Squeeze a lemon or place lemon peels in places from where the ants enter

3. ஆரஞ்சு

இதே போல், ஆரஞ்சு வாடையும் எறும்புக்குப் பிடிக்காது. ஒரு கப்பில் வெதுவெதப்பான நீரில் ஆரஞ்சு பழத்தோலை முக்கி, பேஸ்ட் போல செய்துகொள்ளவும். அதை எறும்பு வரும் இடங்களில் தெளிக்கலாம். 

oranges
How to get rid of ants: Oranges are same as lemons; they keep the ants away from visiting your house

4. மிளகு

எறும்புக்கு இனிப்பு எவ்வளவு பிடிக்குமோ, அதற்கு நேர்மாறாக காரம் சுத்தமாகப் பிடிக்காது. குறிப்பாக மிளகு இருந்தால், அந்த வாடைக்கு எறும்பு எட்டிக்கூட பார்க்காது. 

black pepper 625
How to get rid of ants: Ants are pretty fond of sugar but they hate pepper

5. உப்பு

இதே போல், எறும்புத் தொல்லையில் இருந்து விடுபட உப்பைப் பயன்படுத்தலாம். கொதிக்க வைத்த தண்ணீரில், உப்பு சேர்த்து, நன்றாக கலக்கி, ஒரு ஸ்ப்ரே பாட்டில் மூலம் எறும்பு வரும் இடங்களில் தெளிக்கலாம்.  

salt 620
How to get rid of ants: Spread salt near nooks and corners from where ants enter the house


6. வெள்ளை வினிகர்

எறும்புக்கு வினிகர் நறுமணம் ஆகாது. எறும்பு வரும் இடத்தில் வினிகரை சிறிதளவு ஊற்றினால் போதும். எறும்புத் தொல்லையில் இருந்து விடுபடலாம். 

vinegar 625
How to get rid of ants: Ants can't bear the smell of white vinegar.

7. இலவங்க பட்டை

இலவங்கப்பட்டைத் தூளை வீட்டில் மூலை முடுக்குகளில் தூவினால் போதும். அந்த வாடைக்கு எறும்புகள் வராது. 

cinnamon 625
How to get rid of ants: Put cinnamon and cloves on the entrance of the house

8. துளசி

துளசியின் வாடைக்கும் எறும்புகள் வராது. வீட்டில் துளசி செடி இருந்தால், அதில் இரண்டு இலைகளை பிய்த்து, கையில் வைத்து கசக்கவும். பின்னர், அதை அப்படியே எறும்பு வரும் இடத்தில் போடவும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

peppermint oil
How to get rid of ants: Peppermint is an insect repellent, which can help you get rid of ants


Try these easily available home remedies and say goodbye to ants.

Disclaimer:

The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement