பூ போன்ற இட்லி சாப்பிட ஆசையா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!!

அரிசி, உளுந்து ஆகியவற்றுடன் வெந்தயத்தையும் சிறிதளவு ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.  இவை இட்லியை மிருதுவாக்கும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 18, 2019 13:29 IST

Reddit
Indian Cooking Hacks: Tips To Get Soft, Fluffy Idlis Every Single Time!
Highlights
  • தென்னிந்திய உணவுகளில் பிரதானமானது இட்லி.
  • இட்லியை தயாரிப்பது மிகவும் எளிமையானது.
  • வெந்தயத்தை ஊறவைத்து இட்லி மாவுடன் சேர்த்தால் இட்லி மிருதுவாக கிடைக்கும்.

தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவில் இட்லியும் ஒன்று.  மிருதுவான இட்லிகளே அனைவரின் விருப்பம்.  ருசியான சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட காலை உணவு அமிர்தமாய் இருக்கும்.  ஆனால் இன்னும் சிலருக்கு இட்லியை எப்படி பக்குவமாய் தயாரிப்பதென்றே தெரியாமல் இருக்கிறார்கள்.  கடைகளில் கிடைக்கும் இட்லி மட்டும் மென்மையாய் இருக்கிறது. ஆனால் வீட்டில் செய்வது ஏன் அவ்வளவு ருசியாக இருப்பதில்லை என்று புழும்பிக் கொண்டிருக்கும் பெண்மணிகளுக்காகவே சில எளிய குறிப்புகள் இங்கே...

அரிசி: 
இட்லி பந்து போல் உப்பி வருவதற்கு இட்லி அரிசியை பயன்படுத்தலாம்.  அல்லது பேராபாயில்டு அரிசியை பயன்படுத்தலாம்.  சமைப்பதற்கும் எளிமையாய் இருக்கும்.  ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது.  

vd6cjn78

 

உளுந்து: 
பெரும்பாலும் இட்லி மாவு தயாரிக்க உடைத்த அல்லது முழு உளுந்து தான் பயன்படுத்தப்படுகிறது.  கருப்பு உளுந்து பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு நல்லது.  இரண்டு கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து சேர்த்து செய்யலாம்.  


ஊற வைத்தல்: 
சிலர் அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் ஒன்றாக ஊற வைப்பார்கள்.  ஆனால் தனித்தனியே ஊற வைத்து செய்தால் இட்லி பிரமாதமாக வரும்.  

 

Listen to the latest songs, only on JioSaavn.com

m7l2ip9g 

அரைத்தல்:
நாம் பயன்படுத்தும் இயந்திரங்களை பொருத்தும்கூட இட்லியின் தன்மை மாறுபடும்.  வெட் க்ரைன்டர் பயன்படுத்துவது நல்லது.  இது அரிசி மற்றும் உளுந்தை மிகவும் மென்மையாக அரைத்துவிடும்.  இதனால் இட்லியும் பூ போல கிடைக்கும். 


வெந்தயம்: 
அரிசி, உளுந்து ஆகியவற்றுடன் வெந்தயத்தையும் சிறிதளவு ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.  இவை இட்லியை மிருதுவாக்கும்.  


Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement