உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி : 5 பயன்கள்

100 கிராம் தக்காளி, வெறும் 18 கலோரிகளையே கொண்டுள்ளது.  இதனால், தக்காளி சேர்த்த உணவுகளை எடுத்து கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

   |  Updated: June 23, 2018 23:29 IST

Reddit
Tomatoes For Weight Loss: 5 Reasons Why You Must Include Tomatoes In Your Weight Loss Plan
Highlights
  • இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று – தக்காளி
  • உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தக்காளி அதிகம் கொடுக்கப்படுகிறது
  • குறைந்த கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் சத்தை கொண்டது தக்காளி

ஊட்டச்சத்து நிறைந்த தக்காளி, இந்தியாவில் சமையலுக்கு மிக அதிகமாக  பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று. இதனால், அடிக்கடி தக்காளி விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது வாடிக்கை. ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் தக்காளி உணவுகள் மிக அதிகம். ருசியான சுவையை தருவது மட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகவும் உள்ளது தக்காளி. இரும்புச்சத்து, வைட்டமின் சி, கே, பி1, பி2 ,பி3, பி5, பி6, பொட்டாசியம், மென்கனீஸ் ஆகிய சத்துக்கள் தக்காளியில் அதிகம் உள்ளது.  

Commentsஇருதய ஆரோக்கியம், வளர்சிதை முன்னேற்றம், சரும பாதிப்புகளை தடுப்பது, கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு தக்காளி பெரிதும் உதவுகிறது. மேலும் தக்காளியில் உள்ள லிப்போகைன் எனும் அமிலம் உடலில் இருக்கும் கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன. உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தேவையான பொட்டாசியம் (100 கிராம் தக்காளியில் 267 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது),  தக்காளியில் மிக அதிகமாக உள்ளது. உணவுகளில் தக்காளி சேர்த்து கொண்டால், உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கும்.

 

tomatoesTomatoes are an integral part of a quintessential Indian spread

அதிக நீர் சத்துகளும், குறைந்த கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் சத்தும்  கொண்ட தக்காளி, உடலுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக, உடல் எடையை குறைக்க உதவும்.
 

  1. குறைந்த கலோரி அளவு

100 கிராம் தக்காளி, வெறும் 18 கலோரிகளையே கொண்டுள்ளது.  இதனால், கலோரி அளவு குறைவாக உள்ள தக்காளி சேர்த்த உணவுகளை எடுத்து கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

 
  1. வளர்சிதை முன்னேற்றம்

அதிக ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் கொண்ட தக்காளியில் ஐகோபீன் அதிகமாக உள்ளதால், உடல் வளர்சிதை முன்னேற்றம் இயற்கையாக நடைபெற தக்காளி உதவுகின்றது.
 

  1. பசி

தக்காளியில் நார்சத்து அதிகமாக உள்ளதால், வயிற்றுப்பசியை கட்டுக்குள் வைத்திருந்து, செரிமானம் நிதானமாக நடைபெற உதவுகிறது. இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.
 

  1. சீரான செரிமானம்

செரிமான பிரச்சனைகளால், உடல் எடையில் பாதிப்புகள் ஏற்படும். அதனால் நார்சத்துக்கள் நிறைந்த தக்காளியை எடுத்துகொள்வதன் மூலம், உணவு செரிமானம் ஆகாமல் போகும் தொல்லை குறையும். தேவையற்ற நச்சுபொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற, செரிமானம் சீராக இருப்பது அவசியம்.
 

  1. கொழுப்பை நீக்க

கார்னிடைன் என்ற அமினோ அமிலம் தக்காளியில் உள்ளதால், கொழுப்பு அமிலங்களை உடலில் இருந்து நீக்க உதவுகின்றன. உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கவும்,  உடல் ஆற்றலை அதிகரிக்கவும் அமினோ அமிலங்கள் உதவுகின்றன.


side effects of tomatoes
Newsbeep

Listen to the latest songs, only on JioSaavn.com

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement