பேரிச்சை மற்றும் முந்திரி சேர்த்து ஸ்நாக்ஸ் செய்து பார்ப்போமா!!

பேரிச்சை, முந்திரி, தேங்காய், கல் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பால்ஸ் தயாரித்து சாப்பிடலாம்.  

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 24, 2019 16:31 IST

Reddit
Diabetes Diet: Try Dates And Cashews Balls For A Healthy Snacking Option
Highlights
  • முந்திரி மற்றும் பேரிச்சை கொண்டு ஸ்நாக்ஸ் தயாரிக்கலாம்.
  • இவற்றில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பு சத்து இருக்கிறது.
  • மேலும் இரத்த சர்க்கரையை சீராக வைக்க உதவும்.

நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.  இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, அதனை குறைக்க உதவும் உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.  மேலும் இன்சுலின் அளவை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது.  அதற்கு தகுந்தாற்போல உணவு பட்டியலை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.  நாம் சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபிகளையும்கூட ஆரோக்கியமானதாக இருப்பது அவசியம்.  பசி நேரத்தின் போது ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் ரெசிபிகளை சாப்பிட்டு கொண்டிருக்கக்கூடாது.  இரத்த சர்க்கரையை குறைக்கும் விதமாக முந்திரி மற்றும் பேரிச்சை கொண்டு பால்ஸ் தயாரித்து சாப்பிடலாம்.  இது உங்கள் பசியை போக்கி இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது.  

பேரிச்சை: 
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.  இனிப்பு சுவைக்காக சர்க்கரைக்கு பதிலாக பேரிச்சையை பயன்படுத்தலாம்.  இதில் கலோரிகளும், இயற்கையாகவே இனிப்பு சுவையும் அதிகமாக இருக்கிறது.  தினமும் 2-3 பேரிச்சையை சாப்பிட்டு வரலாம்.  g01ltvs8முந்திரி: 
மற்ற விதைகளை காட்டிலும் முந்திரியில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கிறது.  இதில் நார்ச்சத்து இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.  மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் மற்றும் ஓலிக் அமிலம் இருப்பதால் இருதய ஆரோக்கியம் சீராக இருக்கும்.  

go7m7f5

 

பேரிச்சை, முந்திரி, தேங்காய், கல் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பால்ஸ் தயாரித்து சாப்பிடலாம்.  இதில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சர்க்கரையை சீராக வைக்க இதனை சாப்பிடலாம்.   

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com